ஜன.20 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Ennum Ezhuthum
1 minute read
0
ads banner

 

சென்னையில் வரும் 20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடர்ந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி சென்னையில் வரும் 22-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது.

இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 2 மதியம் மணி வரை நடைபெற உள்ளது

இம்முகாமில் 30 வயதிற்கு உட்பட்ட 8ம் வகுப்பு 10ம் வகுப்பு, ப்ளஸ் 2 ,ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவேற்றம் செய்யவேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 27, March 2025