நாள் : 18-01-2023 முதல் 21-01-2023
மாதம் : ஜனவரி
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. பராபரக்கண்ணி
அறிமுகம் :
Ø இராமலிங்க வள்ளலார் நிகழ்வுகள் சிலக் கூறி அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல், பிறருக்கு உதவி செய்தல் போன்ற சிந்தனைகளை அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø செய்யுள் பகுதியினை பிழையின்றி வாசித்தல்
Ø புதியச் சொற்களை இனம் காணல்
Ø புதியச் சொற்களுக்கு அகராதி மூலம் பொருள் காணுதல்
Ø பாடலின் மையக் கருத்தைக் கூறல்
Ø பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
Ø மனப்பாடப் பாடலை சீர் பிரித்து வாசிக்க வைத்து மனனம் செய்ய வைத்தல்
கருத்துரு வரைபடம் :
பராபரக் கண்ணி
விளக்கம் :
பராபரக்கண்ணி
Ø ஆசிரியர் : தாயுமானவர்
Ø பணி :தலைமைக் கணக்கர்
Ø இந்நூல் தமிழ்மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுகிறது.
Ø அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் கருதும் சான்றோருக்கு தொண்டு செய்ய வேண்டும்.
Ø தொண்டு செய்பவராக ஆகிவிட்டால் இன்ப நிலை வந்து சேரும்.
Ø எல்லோரும் இன்பமாக வாழ்வேண்டும் அதை தவிர வேறு எதுவும் நினைக்க மாட்டேன்.
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
செயல்பாடு :
Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø சீர்ப் பிரித்து வாசித்தல்
Ø புதிய சொற்களை அடையாளம் காணுதல்
Ø புதிய சொற்களுக்கு பொருள் அறிதல்
Ø பாடல் கருத்தை நடைமுறை வாழ்வில் செயல்படுத்துதல்
Ø பாடலை மனனம் செய்தல்
மதிப்பீடு :
LOT :
Ø சோம்பல் எதிர் சொல் தருக
Ø பராபரக்கண்ணியை எழுதியவர் யார்?
MOT :
Ø யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும்?
Ø இன்பநிலை எப்போது வந்து சேரும்?
HOT
Ø குளிரால் வாடுபவர்களுக்கு நீங்கள் எவ்விதம் உதவுவீர்கள்?
Ø மற்ற உயிரினங்களுக்கு எவ்விதம் உதவுவீர்கள்?
கற்றல் விளைவுகள் :
பராபரக்கண்ணி
T619 பல்வேறு சூழல்களில் நிகழ்வின் போது மற்றவர்கள் கூறியவற்றை தமது சொந்த மொழியில் எழுதுதல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø பிறரை மகிழ்விக்கும் செயல்களை எழுதி வருக.