7 ஆம் வகுப்பு தமிழ் பாடக் குறிப்பு (18.1.23 to 21.1.23)

Ennum Ezhuthum
0

 


நாள்               :           18-01-2023 முதல் 21-01-2023     

மாதம்                          ஜனவரி

வாரம்               :              மூன்றாம்   வாரம்                     

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. அணி இலக்கணம்

அறிமுகம்                                 :

Ø  உங்களை நீங்கள் எவ்விதம் அழகு செய்து கொள்வீர்கள்? என வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  அணியால் சுவை பெறும் பாடல்களைப் படித்துச் சுவைத்தல்.

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø   

Ø  அணிப் பற்றிக் கூறல்

Ø  அணி என்னும் சொல்லுக்கு அழகு

Ø  உவமை அணி பற்றிக் கூறல்

Ø  எடுத்துக்காட்டு உவமை அணியை கூறல்

Ø  இல்பொருள் உவமையணியை கூறல்

நினைவு வரைபடம்                   :

                                                                                                    அணி இலக்கணம்



 

விளக்கம்  :

( தொகுத்தல் )

அணி இலக்கணம்

Ø அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்

Ø  உவமை அணி : ஒரு பாடலில் உவமையும்,உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் உவமை அணி

Ø   உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் எடுத்துக்காட்டு உவமை அணி

Ø   உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது இல்பொருள் உவமை அணி

 

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

o  இலக்கணம் என்பதனை அறிதல்

o  அணி என்பதன் பொருள் அறிதல்

o  உவமைஅணி பற்றி அறிதல்

o  எடுத்துக்காட்டு உவமையணி பற்றி அறிதல்

o  இல்பொருள் உவமையணி பற்றி அறிதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  அணி என்பதன் பொருள் யாது?

Ø  உவம உருபுகள் கூறுக.

MOT

Ø  உவமை அணியை விளக்குக.

Ø  எடுத்துக்காட்டு உவமை அணியை விளக்குக.

HOT:

Ø  தொடர்களில் உவமை, உவமேயம்,உவம உருபு இவற்றைக் காண்க.

o    மலரன்ன பாதம்

o    தேன் போன்ற மொழி

o    மயிலொப்ப ஆடினாள் மாதவி

கற்றல் விளைவுகள்  :

அணி இலக்கணம்    

T710  பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்பு கூறுகளைதேடிக் கண்டறிதல்.

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  நீ அறிந்த வேறு அணிக் கொண்ட பாடலை எழுதி வருக

Post a Comment

0Comments

Post a Comment (0)