மனித உடலில் ஐம்பூதங்களின் தன்மைகள் கீழ்கண்ட அடையாளங்களாக காணப்படுகின்றன.
நீர் - இரக்கம்
நெருப்பு - ஒழுக்கம் (சுத்தம்)
காற்று - விழிப்புணர்வு
நிலம் - பொறுமை
ஆகாயம் - இனிமையான பேச்சு
1. நீர், நாம் எப்போதும் "இரக்கத்துடன் நடந்துகொண்டால்" நம் உடலில் நீர்ச்சத்துக் குறையாது, அது தொடர்பான எந்த நோய்களும் வராது. அதற்கு நெஞ்சில் ஈரம் வேண்டும்.
2. நெருப்பு, நாம் எப்போதும் சுத்தத்தை பேணி "ஒழுக்கத்துடன் நடந்து கொண்டால்" நம் உடல் மற்றும் மனதிலுள்ள அனைத்து அழுக்குகளையும் நெருப்பு பொசுக்கி உடலின் வெப்பத்தை பாதுகாக்கும். அதற்கு அசுத்தத்தை சுட்டெரிக்க வேண்டும்.
3. காற்று, நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் "விழிப்புணர்வுடன்" செய்தால் சுவாசம் சம்பந்தமான எந்த நோய்களும் வராது, முதுமை என்பது எளிதில் நெருங்காது. அதற்கு வாசியில் கவனம் வேண்டும்.
4. நிலம், நாம் கோபத்தை அறவே ஒழித்து எல்லோரிடத்தும் "பொறுமையைக் கடைபிடித்தால்" ஆயுள் அதிகரிக்கும். அதற்கு அரவணைக்கும் கைகள் வேண்டும்.
5. ஆகாயம், நாம் பிறர் நோகும்படி பேசாமல் இனிமையான பேச்சை மேற்கொண்டால் ஆகாயம் அளவு அன்பு அதிகரிக்கும். அதற்கு எல்லையற்ற மனம் வேண்டும்.
இந்த ஐந்துவிதத் தன்மைகளையும் உடலில் ஒருபோதும் குறையாமல் பார்த்துக்கொண்டால், இயற்கையாகிய ஐம்பூதங்களும் நம் உடலில் சரியாக வாசம் செய்யும்! ஆத்திகரென்றால் கடவுளை அடையும் உண்மை வழியறிந்து முக்தி அடையலாம். நாத்திகரென்றால் செய்த முயற்சியின் முழுபலனையும் பிரபஞ்சத்திடம் இருந்து பெறலாம்.
யார் எப்படியோ எண்ணியது எண்ணியவாறு நடக்கும், தினந்தோறும் வாழ்வில் மகிழ்ச்சி கிட்டும்.