சிறுசேமிப்பு திட்டம்: செப்.30 ம் தேதிக்குள் ஆதார், பான் கட்டாயம்..!

Ennum Ezhuthum
0

 

சிறுசேமிப்பு திட்டம்: செப்.30 ம் தேதிக்குள் ஆதார், பான் கட்டாயம்..!

த்திய நிதி அமைச்சகம் பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவித்ததோடு, ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருந்தது.
 
இந்நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசின் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் மற்றும் பான் எண்கள் கட்டாயம் எனத் தெரிவித்துள்ளது. ஆறுமாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.பிபிஎப், சுகன்யா சம்ரித்தி யோஜனா, தபால் சேமிப்பு திட்டம், முதியோர் சேமிப்பு திட்டம் உள்ளிட்டவைகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் செப்டம்பர் 30 ம் தேதிக்குள் சமர்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
இதை தவிர புதிதாக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோரும், கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 6 மாத காலத்திற்கு ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள், ஆதார் எண் பெறுவதற்கு பதிவு செய்துள்ள எண்ணை சமர்ப்பிக்கலாம்.சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்த ஆறு மாத காலத்திற்குள், ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு செய்த எண்ணை சமர்ப்பிக்கவில்லை என்றால், அந்த கணக்கு தொடர்ந்து செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஏற்கனவே சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆறுமாத காலத்திற்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்கவில்லை என்றால், வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் திட்டம் செயல்பாட்டில் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 இதனால் தொடர்ந்து திட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்த இயலாது.இதேபோல் சிறுசேமிப்பு கணக்கு தொடங்கும் போது பான் எண்ணை சமர்ப்பிக்கவில்லை என்றால், இரண்டு மாதக் காலத்திற்குள் பான் எண்ணை சமர்பிக்க வேண்டும்.சேமிப்பு கணக்கில் ரூ.50ஆயிரம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், வருடத்திற்கு ரூ.1லட்சம் முதலீடு செய்வோர், சிறுசேமிப்பு திட்டங்களிலிருந்து மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.இப்படிச் சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருப்போர் இரண்டு மாதத்திற்குள், பான் எண்ணை சமர்பிக்கவில்லை என்றால், பான் எண்ணை சமர்பிக்கும் வரை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)