உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா உங்க குடல் பாழாகிடும்..

Ennum Ezhuthum
0

 

 னித உடலில் குடல் மிகவும் முக்கியமான உறுப்புக்களில் ஒன்றாகும். இந்த குடல் ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாது.

 

ஏனெனில் குடலானது உடலில் பல்வேறு முக்கியமான பணிகளை செய்து வருகிறது. அதில் ஆற்றலை உற்பத்தி செய்வது முதல் ஹார்மோன் அளவுகளை சமநிலையில் பராமரிப்பது வரை, பல செயல்பாடுகளில் குடல் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே இத்தகைய குடலை நாம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள தவறக்கூடாது.

 

ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் போன்றவை நமது குடல் ஆரோக்கியத்தை அழித்துக் கொண்டிருக்கின்றன. அதன் காரணமாக, தற்போது குடல் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதைத் தவிர்க்க வேண்டுமானால், ஒவ்வொருவரும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். குறிப்பாக குடல் ஆரோக்கியத்தை அழிக்கும் சில பழக்கவழக்கங்களை முதலில் தவிர்க்க வேண்டும். 

 

இப்போது நமது எந்த பழக்கங்கள் குடல் ஆரோக்கியத்தை அழிக்கின்றன என்பதைக் காண்போம். அந்த பழக்கங்கள் உங்களிடம் இருந்தால், உடனே அப்பழக்கத்தை கைவிட முயற்சி செய்யுங்கள்.

 

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது
 

தற்போது மக்களிடையே ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமென்ற எண்ணம் அதிகரித்துள்ளது. ஆனால் சோம்பேறித்தனத்தின் காரணமாக, நிறைய பேர் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான உடற்பயிற்சியை செய்வதில்லை. ஒருவர் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். 

 

அதில் முக்கியமாக மன அழுத்தம் குறையும் மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயமும் குறையும். இது தவிர உடற்பயிற்சி செய்யும் போது குடலில் உள்ள பாக்டீரியாக்களின் செயல்பாடு ஊக்குவிக்கப்பட்டு, குடல் ஆரோக்கியம் மேம்படும். ஒருவரது மெட்டபாலிச அளவு சிறப்பாக இருக்க வேண்டுமானால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவு சிறப்பான அளவில் இருக்க வேண்டும். எனவே தினமும் தவறாமல் சிறிது நேரமாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

 

தூக்கமின்மை

 

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல தரமான தூக்கம் அவசியம் என்பதை அனைவருமே அறிவோம். உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்காத போது, மூளை, உடல் மற்றும் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகின்றன. முக்கியமாக குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் பாதிக்கப்பட்டு, குடல் ஆரோக்கியமும் சேதமடைகிறது. எனவே தினமும் சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்ள முயலுங்கள்.

 

மன அழுத்தம்


தற்போதைய நவீன வாழ்க்கை முறையில், மக்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளது என்றே கூற வேண்டும். அதிகளவு மனஅழுத்தத்தை ஒருவர் கொள்ளும் போது, அது உடலில் மோசமான விளைவை உண்டாக்கும். குறிப்பாக மன அழுத்தம் அதிகரிக்கும் போது, அது குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களை அழிக்கிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கை வகிக்கின்றன. அந்த பாக்டீரியாக்களின் அளவு குறைவும் போது, உடலில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட தொடங்குகின்றன. 

எனவே மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம் போன்ற செயல்களில் தினமும் ஈடுபடுங்கள்.

 

அதிகப்படியான மது

 

தற்போது மது அருந்துவது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் அதிகளவு மது அருந்துவது செரிமான மண்டலத்தை சீரழிக்கும். முக்கியமாக இது உண்ணும் உணவுகளை சரியாக உடைத்தெறிய விடாமல், வாயு உற்பத்தியை அதிகரிப்பதோடு, அடிக்கடி வயிற்று வலியையும் உண்டாக்கும். எனவே இதுவரை நீங்கள் அதிகளவு மது அருந்துபவராக இருந்தால், இனிமேல் அதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

 

முழு தானிய உணவுகளை அதிகம் உண்ணாமல் இருப்பது

 

பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய முழு தானிய உணவுகளானது குடலில் பல்வேறு வகையான பாக்டீரியாக்களை ஊக்குவிக்க உதவுகிறது. எனவே நீங்கள் உங்கள் உணவில் முழு தானிய உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருந்தால், இனிமேல் பல வகையான தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்ளுங்கள். இதனால் குடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)