மனஅழுத்தத்தை குறைக்க 8 எளிய வழிகள்!

Ennum Ezhuthum
0

 

மனஅழுத்தத்தை குறைக்க 8 எளிய வழிகள்!

வாய்விட்டு சிரிக்கவும்

தினசரி சிறிது நேரமாவது வாய்விட்டு சிரிக்க வேண்டும்.

ஏனென்றால், நாம் ஒவ்வொரு முறை சத்தமாக சிரிக்கும்போதும், அதிகப்படியான ஆக்சிஜன் நம் உடல் உறுப்புகளுக்கு சென்று வரும். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி, மன அழுத்தம் தானாகவே குறைந்துவிடும்.

செல்லப்பிராணியுடன் நேரத்தை செலவிடுங்கள்

நம் வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடும்போது, நம் உடலில் இருந்து நல்ல ஹார்மோன்களான செரடோனின் மற்றும் ப்ரோலேக்டின் ஆகியவை சீராக வெளியேறுகின்றன. இவை மன அழுத்தம் ஏற்படும் சூழலை குறைக்கின்றன.

சுற்றுச்சூழல் சுத்தமாக வைக்கவும்

நாம் வசிக்கும் இடத்தையும், சுற்று சூழலையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது மிக அவசியமாகும். அதேபோல் சுற்றி இருக்கும் பொருட்களையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரித்து வைத்திருக்க வேண்டும்.

வீட்டுவேலை

வீட்டில் இருக்கும்போது, கிடைக்கும் ஓய்வு நேரத்தில், வீட்டிற்காக செய்ய வேண்டிய சின்ன சின்ன வேலைகளையாவது நாமே செய்யலாம். அவ்வாறு செய்யும்போது, உடலில் உள்ள கலோரிகள் எரிவதுடன், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், சோர்வடையாமல் நீண்ட நேரம் எனர்ஜியுடன் இருக்க
முடியும்.

பழச்சாறு அருந்தவும்

தினசரி ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை வெகுவாக குறைத்து, உடலை திறம்பட செயல்பட வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இசையை கேட்பது

வீட்டில் இருக்கும்போது, மென்மையான இசையை கேட்பது அல்லது டிவி நிகழ்ச்சியை பார்ப்பது. அதுபோன்று ரேடியோவை ஆன் செய்து, அதோடு சேர்ந்து உங்களுக்கு பிடித்தமான பாடலை வாய்விட்டு பாடலாம். இதனால் மன மகிழ்ச்சி ஏற்படுவதுடன், மன அழுத்தமும் நிச்சயம் குறையும்.

நடைப்பயிற்சி

மன அழுத்தத்தை குறைக்க மிக முக்கியமான வழி உடற்பயிற்சி. அதிலும், தினசரி அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வதன் மூலம் எண்டார்பின்கள் சுரந்து, புத்துணர்வை அளிக்கின்றன.

மூச்சுப்பயிற்சி


இயற்கையான சூழலுக்கு சென்று, ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொண்டால் மன அழுத்தம் குறையும். இதனால் ரத்தத்தில் ஆக்சிஜன் கலந்து, அமைதி கிடைக்க வழிவகுக்கும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)