முதலில்
சோயா பீன்ஸை நீரில் 7-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்நீரை
வடிகட்டிவிட்டு, சோயா பீன்ஸை குக்கரில் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி,
அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும், குக்கரைத் திறக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க
வேண்டும். பின் அதில் பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு 1 நிமிடம் வதக்க
வேண்டும். பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா
சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் வேக வைத்துள்ள சோயா
பீன்ஸை நீருடன் சேர்த்து, சோயா பீன்ஸை லேசாக மசித்து விட்டு கிளறி, சிறிது
உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து சற்று கெட்டியாகும் வரை கொதிக்க
வைத்து இறக்க வேண்டும். இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான
சோயா பீன்ஸ் கிரேவி தயார்.