ATM கார்டு மூலம் ரூ.10 லட்சம் வரை இலவச காப்பீடு.. க்ளைம் செய்வது எப்படி?

Ennum Ezhuthum
0

 

ATM கார்டு மூலம் ரூ.10 லட்சம் வரை இலவச காப்பீடு.. க்ளைம் செய்வது எப்படி?

ATM Card Provides Insurance : வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரிடமும் ஏடிஎம் கார்டு இருக்கும்.
ஏடிஎம் கார்டுகளின் பயன்பாடு வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. ஏனென்றால், ஏடிஎம் கார்டு இருந்தால் வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. அதுமட்டும் அல்ல, ஷாப்பிங் செய்யும் போது கையில் பணம் இருக்க வேண்டும் என்ற அவசியம் சில்லை. ஷாப்பிங் செய்யும் போது கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால், குறிப்பிட்ட பிராண்டுகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ATM-யில் இது போன்ற பல நன்மைகள் இருப்பது நாம் அனைவருக்கு இயல்பாக தெரிந்த ஒன்று. ஆனால், ஏடிஎம் கார்டு மூலம் ரூ.10 லட்சம் வரை காப்பீடு தொகை ( Insurance Cover ) பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. டெபிட் கார்டு ( Debit Card ) வைத்திருப்பவர்களுக்கு, அவரவர் வங்கி கிளையை பொறுத்து காப்பீடு தொகை மாறுபடும்.




நாட்டில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளும், ஏடிஎம் கார்டு (ATM Card) வைத்திருப்பவர்களுக்கு அவசர சிகிச்சை மற்றும் விபத்து மரணம் கவரேஜ்களை வழங்குகின்றன. இந்த காப்பீட்டுத் தொகையானது வாடிக்கையாளரின் வங்கி பரிவர்த்தனைகளைப் பொறுத்து ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வழங்கப்படும். இந்த தகவலை வகைகள் தங்களின் வாடிக்கையாளருக்கு வழங்குவதில்லை. ஆனால், பெரும்பாலான வங்கிகள் தற்போது கிரெடிட் கார்டுகளுக்கு காப்பீடு வழங்குகின்றன. உங்கள் வங்கிக் கணக்கு செயலிழந்தால், நீங்கள் காப்பீட்டை தொகையை பெற முடியாது.

இறந்த நபருக்கான காப்பீட்டுத் தொகையை க்ளைம் செய்வது எப்படி?

ஏடிஎம் கார்டு இருந்தும் பல நுகர்வோர் காப்பீட்டுக் கோரிக்கையைச் செய்ய விரும்புவதில்லை. இதற்கு பெரிய செயல்முறை இருக்கும் என்று அஞ்சி அதை அவர்கள் செய்வதில்லை. இன்னும் சிலருக்கு இது குறித்து தெரியாது. ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர் விபத்தில் சிக்கினால், காப்பீட்டுக் கோரிக்கையை உடனடியாக மேற்கொள்ளும் வகையில், காவல்துறைக்கு முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சேகரிக்கவும்.

சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவப் பதிவேடுகள் சேகரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் இறந்தால், பிரேத பரிசோதனை அறிக்கை, போலீஸ் அறிக்கை, இறப்புச் சான்றிதழ், தற்போதைய ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை அவரின் உறவினர் எடுத்துச் செல்ல வேண்டும்.




கடந்த 60 நாட்களாக ஏடிஎம் மூலம் செல்லுபடியாகும் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். காப்பீட்டுக்கான கோரிக்கையை செலுத்தவும். உரிய ஆவணங்கள் அனைத்தையும் சமர்பித்த பின்னர், அவை சரிபார்க்கப்படும். இதையடுத்து, வங்கிகள் பாதிக்கப்பட்டவருக்கான காப்பீட்டுத் தொகையை வழங்கும்.

கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை ஒரு நபர் பயன்படுத்தும் கார்டின் வகையைப் பொறுத்து ரூ.30,000 முதல் ரூ.10 லட்சம் வரையிலான விபத்து மரண காப்பீடு வழங்குவதாக செபியில் பதிவுசெய்யப்பட்ட வரி மற்றும் முதலீட்டு நிபுணர் கூறினார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)