தேவை:
வஞ்சீரம் - 2 துண்டுகள்
சின்ன வெங்காயம் - இரண்டு கைப்பிடி அளவு.
தக்காளி - 1
எலுமிச்சைச் சாறு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி.
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
வாழை இலை - 2 துண்டுகள்
செய்முறை:
சுத்தம் செய்த மீன்துண்டுகளில், எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு இந்த கலவையை ஊறவைக்க வேண்டும் . இப்போது தேங்காய், கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு மற்றும் சீரகத்தை மிக்ஸி சாரில் சேர்த்து ஒரு பேஸ்டாக அரைக்கவும். இதனை தக்காளி , வெங்கயத்துடன் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்னர் இந்த பேஸ்டை ஊற வைத்திருந்த மீனில் தடவிக்கொள்ளவும். தொடர்ந்து வாழை இலையில் மசாலா தடவிய மீனை வைத்து மடித்துக் கொள்ளவும். அதனை நூல்கொண்டு கட்டி இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் மிதமான சூட்டில் வேகவைத்து எடுத்தால் மகாபலிபுரம் வாழைஇலை மீன் ரெடி.