கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த சட்னியை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க...

Ennum Ezhuthum
0

 

 

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த சட்னியை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க...

Coriander Mint Chutney To Reduce Cholesterol Levels: 

 

தற்போது நிறைய பேருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளது.

 

கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகு போன்ற பொருளாகும். இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது. நமது உடலில் உள்ள கல்லீரல் இந்த கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கின்றன. இருப்பினும் நாம் உண்ணும் உணவுகளின் மூலமும் உடலில் கொலஸ்ட்ரால் சேர்கிறது. கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) ஆகும். இவற்றில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது, அதன் விளைவாக மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயம் அதிகரிக்கிறது. எனவே உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது மிகவும் முக்கியம்.

நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பல்வேறு உணவுப் பொருட்கள், பானங்கள் இருந்தாலும், நாம் தினமும் இட்லி, தோசைக்கு சைடு டிஷ்ஷாக சாப்பிடும் சட்னி ஒன்று கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா? ஆம், நம்மால் கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு என்று பிரத்யேகமாக பானங்களைத் தயாரித்து குடிக்க முடியாமல் போகலாம். ஆனால் இட்லி, தோசைக்கு நிச்சயம் சட்னியை செய்வோம். அப்போது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சட்னியை செய்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கலாம் அல்லவா! இப்போது அந்த சட்னியை எப்படி செய்வது என்பதையும், அதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளையும் காண்போம்.


தேவையான பொருட்கள்:

* கொத்தமல்லி - 50 கிராம்

* புதினா - 20 கிராம்

* பச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்ப

* பூண்டு - 20 கிராம்

* ஆளி விதை எண்ணெய் - 15 கிராம்

* இசப்கோல் - 15 கிராம்

* உப்பு - சுவைக்கேற்ப

* எலுமிச்சை சாறு - 10 மிலி

* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

மிக்சர் ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சட்னி தயார்.

புதினா மற்றும் கொத்தமல்லியின் நன்மைகள்

புதினா மற்றும் கொத்தமல்லியில் குளோரோஃபில் அதிகம் உள்ளது. இந்த இரண்டு பொருட்களுமே இந்திய சமையலறையில் அவசியம் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான மூலிகைகள் ஆகும். இந்த புதினா மற்றும் கொத்தமல்லியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது நல்ல செரிமானத்திற்கு உதவுவதோடு, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன.

பூண்டு நன்மைகள்

ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட மற்றொரு பொருள் தான் பூண்டு. இந்த பூண்டு கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தை மெலிதாக்கி, இரத்த குழாய்கள் சுருங்குவதைத் தடுத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

இசப்கோல் நன்மைகள்

இசப்கோல் குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்குகிறது. மேலும் இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொலஸ்ட்ராலை பித்த அமிலங்களுடன் பிணைத்து குறைக்கிறது. முக்கியமாக இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவி புரிகிறது.

ஆளி விதை நன்மைகள்

ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது. இவை கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள சட்னியை உங்களின் தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

Post a Comment

0Comments

Post a Comment (0)