பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்தில், நான்கு முதல் ஐந்து நாள்கள் கடுமையான வலியை எதிர்கொள்கிறார்கள்.
இது அவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறது.
இந்த நிலையில், பெண்களின் வலியை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்தது.
மாதவிடாய்அதன் அடிப்படையில், பிப்ரவரி 16 வியாழன் அன்று, கருக்கலைப்பு மற்றும் திருநங்கைகளின் உரிமைகள் உட்பட, பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகளுக்கான சட்டங்களை ஸ்பெயின் நிறைவேற்றியது.
அதில், `ஸ்பெயினில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் அசௌகர்யமாக உணர்ந்தால், மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை மாதவிடாய் விடுப்பு எடுக்கலாம்' என அந்த நாட்டு அரசு சட்டம் நிறைவேற்றியது.
இதன் மூலம் `ஐரோப்பாவில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்புக்கான உரிமையை வழங்கும் முதல் நாடு' என்ற பெருமையை அது பெற்றுள்ளது.
இந்தப் புதிய சட்டம் குறித்து நாட்டின் சமத்துவ அமைச்சர் ஐரீன் மான்டெரோ கூறுகையில், ``பெண்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த முடிவு முக்கியமானது. இந்தச் சட்டம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பணம் செலுத்தாமல் இருப்பதற்கான உரிமையை வழங்குகிறது.
மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த உரிமைகள் இல்லாமல் பெண்கள் முழுக் குடிமக்களாக இருக்க முடியாது. மாதவிடாய் விடுப்புக்கு அரசு நிதியுதவி அளிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் அரசின் இந்தச் சட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.