நல்லி எலும்பு ரசம்

Ennum Ezhuthum
1 minute read
0

 

நல்லி எலும்பு ரசம்

தேவை

நல்லி எலும்பு - 250 கிராம்
தண்ணீர் - 1லிட்டர்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

உப்பு - 1 1/2 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1
சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்
மஞ்சள் - 1/4 ஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - 1 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
மிளகு - தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி - கையளவு.

பக்குவம்

குக்கரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை போடவும். பின் தண்ணீர் ஊற்றவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகு, வெங்காயம், சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து நன்குக் கலக்கவும். குக்கரை மூடி அடுப்பில் குறைவான தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும். தொடர்ந்து கடாயில் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் வேக வைத்த மட்டன் தண்ணீரை ஊற்றவும். இறுதியாக மிளகுப் பொடி தூவி கொத்தமல்லி தழையையும் தூவவும். தற்போது
காரசாரமான நல்லி எலும்பு ரசம் தயார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)