
கடந்த பத்து நாட்களாக நிலவுக்கு அருகில் வியாழனும், வெள்ளியும் தெரியும் அற்புதக் காட்சி வானில் அரங்கேறி வருகிறது.
![]() |
சூரியனை நிலா 365.2 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. சூரியனை வெள்ளி 225 நாட்களில் சுற்றி வருகிறது, வியாழன் 9 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சுற்றி வருகிறது.
அவ்வாறு சுற்றி வரும்போது அரிய தருணமாக 13 மாதங்களுக்கு ஒருமுறை நிலவுக்கு அருகில் வெள்ளி, வியாழன் வருவதை நம்மால் காண முடியும். அதாவது, பூமியிலிருந்து வெற்று கண்ணால் நாம் நிலவின் அருகில் அல்லது நேர்கோட்டு திசையில் இருக்கும் வெள்ளி, வியாழன் கோளைக் காணலாம்.
மாலை 6 மணி முதல் 8 மணிவரை இக்காட்சியை நாம் வானில் தெளிவாகக் காணலாம்.
சென்னையில் தெரிந்த காட்சிஇதில், வடக்கு ஐரோப்பா மற்றும் கிரீன்லாந்தில் நிலவுக்கு முன்னால் வெள்ளி கோளை காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நிகழ்வு சந்திர மறைவு என்று அழைக்கப்படுகிறது.
அதே நேரத்தில் உலகின் பிற பகுதிகள் நிலவுக்கு அருகே செவ்வாய், வியாழன் ஆகியவை தோன்றும் காட்சியைக் காணலாம். மேலும் மார்ச், 1-ஆம் தேதியான இன்று நிலவுக்கு மிக அருகில் வெள்ளியும், வியாழனும் காணப்படும். இது மிக அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.