முட்டை சேமியா உப்புமா முட்டை சேமியா உப்புமா

Ennum Ezhuthum
0

 

முட்டை சேமியா உப்புமா




முட்டை சேமியா உப்புமா

 

 

தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்

பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பச்சை பட்டாணி - 1/2 கப்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 2 கப்
சேமியா - 2 கப்
முட்டை - 2
தேவையான காய்கறிகள் - சிறிதளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், சோம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயம், தேவையான காய்கறிகள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் தக்காளியைப் போட்டு, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு, மசாலா பொடிகள் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் சேமியாவை சேர்த்து கிளறி, நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மூடியால் 6-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின் மூடியைத் திறந்து முட்டையை சேமியாவுடன் நன்கு கிளறி இறக்கினால், முட்டை சேமியா உப்புமா தயார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)