இடியாப்ப சாண்ட்விச்

Ennum Ezhuthum
0

 

இடியாப்ப சாண்ட்விச்

தேவை:

இடியாப்பம் - 2
கிரீன் சட்னி - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - பாதியளவு
துருவிய பனீர் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சாட் மசாலா - 1 தேக்கரண்டி
சேஸ்வான் சாஸ் - சிறிதளவு
மயோனைஸ் - சிறிதளவு.

செய்முறை:

இரண்டு இடியாப்பத்திலும் முதலில், கிரீன் சட்னியை தடவிக் கொள்ள வேண்டும். பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்க்க வேண்டும். பின்னர், துருவிய பனீர் சேர்க்க வேண்டும். அதன்மீது சிறிதளவு உப்பு தூவிவிட்டு, பின்னர், சாட் மசாலாவை தூவவும். அதன்பிறகு சேஸ்வான் சாஸ் இடியாப்பத்தை சுற்றி விடவும். பின்னர், மயோனைஸை இடியாப்பம் முழுவதும் சுற்றி விட்டுவிட்டு மேலே ஒரு இடியாப்பத்தை வைத்து மூடி கிரில்லரில் வைத்து எடுத்துவிட்டு அதன்மீது மீண்டும் சாட் மசாலா லேசாக தூவி பரிமாற வேண்டும். சுவையான இடியாப்ப சாண்ட்விச் தயார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)