உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடும் உணவுகள்

Ennum Ezhuthum
2 minute read
0
ads banner


உடற்பயிற்சிக்குப் பின்  உண்ண.

ரோக்கியமான தசைகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் கலோரிகளை குறைத்தால் மட்டும் போதாது.

அத்துடன் ஆரோக்கியமான உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டியது அவசியம். ஒருவர் விரும்பிய இலக்கை அடைவதற்கு வழக்கமான உடற்பயிற்சிகளுடன், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்பட டயட்டும் வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு அதிக முயற்சி தேவை. அதைத் தொடர்ந்து செய்வதற்கு நம்மை நாமே ஊக்குவிக்க வேண்டும்.

உணவுகள் என்று வரும் போது, உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடும் உணவுகள் தசையைச் சரிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உடற்பயிற்சி செய்த பின்னர் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், அது கடுமையான உடற்பயிற்சியால் தசையில் ஏற்பட்ட மாறுபாடுகளை சரிசெய்து, தசை வலியைக் குறைத்து மறுநாள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ப உடலுக்கு ஆற்றலை அளிக்கும்.

பலரும் உடற்பயிற்சிக்கு பின் புரோட்டின் பார்கள் மற்றும் புரோட்டின் ஷேக்குகளைச் சாப்பிடுவது மட்டுமே சிறந்தது என்று நம்புகின்றனர். ஆனால், இதைவிடச் சிறந்த உணவுகளும் உள்ளன. அந்த உணவுகளை உட்கொண்டால், தசை மாறுபாடுகள், காயங்கள் விரைவில் குணமாவதோடு, உடலுக்குப் போதுமான ஊட்டச்ச்ததுக்கள் கிடைத்து உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

முட்டைகள்

முட்டைகளில் புரோட்டின் அதிகம் நிறைந்துள்ளது. எனவே, உடற்பயிற்சி செய்த பின் மூன்று முட்டைகளைச் சாப்பிடுவதன் மூலம், தசைகளில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் சரியாகும். மேலும் முட்டையில் வைட்டமின் ஏ, டி, ஈ, பி 12, பி 6 மற்றும் கே போன்ற வைட்டமின்களும் உள்ளன.

பனீர்

பன்னீரில் இரண்டு வகையான புரோட்டின்கள் உள்ளன. அவை வே மற்றும் கேசீன். இதில் வே புரோட்டின் உடற்பயிற்சிக்குப் பின் தசைகளை விரைவில் குணப்படுத்தம் திறனுக்கான நன்கு அறியப்பட்டதாகும். கேசீர், என்பது மெதுவாகச் செயல்படும் புரோட்டின். நாம் தூங்கும்போது, இது நம் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களைக் குணப்படுத்தும். எனவே, நீங்கள் உடற்பயிற்சிக்குப் பின் சுவையான உணவை உட்கொள்ள நினைத்தால், பனீரைச் சாப்பிடுங்கள்.

மீன்கள்

மீன்கள் அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக, சால்மன் மீன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டது. அதுமட்டுமின்றி, இதில் புரோட்டின், வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் செலினியம் போன்றவையும் அதிகம் உள்ளன. ஒமேகா-3 உடலில் உள்ள காயங்களைக் குறைக்கும். கூடுதலாக இதில் உள்ள பொட்டாசியம், உடற்பயிற்சியின் போது இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மாற்ற உதவும். சால்மன் மீனில் புரோட்டின் அதிகம் இருப்பதால், உடற்பயிற்சிக்குப் பிறகு தசைகளை சரிசெய்ய மற்றும் மீண்டும் உருவாக்க உதவுகிறது. நம் ஊர் மீன் என்றால் வஞ்சிரம் சாப்பிடலாம்.

நட்ஸ்


நட்ஸ்களில் அத்தியாவசிய ஊட்டச்சதுக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. ஒரு கையளவு பாதாம், வால்நட்ஸ் அல்லது முந்திரியை உடற்பயிற்சிக்குப் பின் சாப்பிடுவது உடலுக்குத் தேவையான புரோட்டின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்களை வழங்கும். வேண்டுமெனில் பூசணிக்காய் விதை, சூரியகாந்தி விதை, சியா விதை போன்றவற்றையும் உடற்பயிற்சிக்குப் பின் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடலாம்.

சிறுதானியங்கள்

கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரோட்டின்கள் என உடற்பயிற்சிக்குப் பின் தேவையான இரண்டு சத்துக்களையும் கொண்ட முழு தானியங்கள்தான் சிறுதானியங்கள். குறிப்பாக, தினை. தாவர அடிப்படையிலான புரோட்டினைக் கொண்ட தினை, அதிகளவு ஊட்டச்சத்துக்களைக் கொண்டதுடன், க்ளுட்டன் இல்லை. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உடல் எடையைப் பராமரிக்க விரும்புவோருக்கு ஏற்ற உணவுப் பொருள். உங்கள் உணவில் புரோட்டின் அதிகம் சேர்க்க நினைத்தால், மீன், சிக்கன், பழங்கள் அல்லது காய்கறிகளுடன், தினையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதோடு, இதில் நல்ல அளவில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது மற்றும் இதை உடற்பயிற்சிக்கு பின் சாப்பிட்டால் உடற்பயிற்சியின் போது இழந்த ஆற்றலைப் பெற உதவும்.

நினைவில் கொள்ள வேண்டியவை

உடற்பயிற்சிக்குப் பின் எக்காரணம் கொண்டும் உப்பு நிறைந்த உணவுகள், எனர்ஜி அல்லது புரோட்டீன் பார்கள் போன்ற செயற்கைச் சுவையூட்டிகள் நிறைந்த உணவுகளை உண்ணக்கூடாது. இல்லாவிட்டால், இது உங்களின் ஃபிட்னஸ் பயணத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் சோடா அல்லது எனர்ஜி பானங்களுக்கு பதிலாக, இளநீர் அல்லது வெறும் நீரைக் குடிக்கலாம்.


ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 4, April 2025