வயிற்றுவலி,
அஜீரணம், உணவு செரிமானப் பிரச்சனை, வயிறு வீக்கம் போன்ற இந்த செரிமான
பிரச்சனைகள் தான் ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் வருவதற்கு ஓர்
காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆல்கஹாலிக் கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என்பது அதிக உடல் எடை அல்லது பருமனாக இருப்பவர்கள் நோயினால் அதிக ஆபத்தில் உள்ளனர். இந்த நிலையைக் கண்டறிவதற்கு ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளும் இல்லை. இருப்பினும் கீழ்வரும் சில காரணங்கள் கொழுப்பு கல்லீரல் நோய்க்கு ஒரு காரணமாக அமையலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.
வயிறு வீக்கம்:
The World Journal of Gastroenterology இன் படி, சிரோசிஸ் உள்ள நோயாளிகளில் 80 சதவீதம் பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரைப்பை குடல் அறிகுறிகள் பிரச்சனைகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அவற்றில் 49.5 சதவீத நோயாளிகளுக்கு வயிற்றில் வீக்கம் ஏற்படுவது பொதுவான அறிகுறிகளாக இருந்துள்ளது. இவற்றிற்கு முறையாக சிகிச்சைகள் அளிக்கப்படாத போது தான், வயிற்றில் பல தொற்றுகள் ஏற்படுவதோடு கல்லீரல் பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது.
வயிற்று வலி:
ஆல்கஹால் அல்லது கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (NAFLD) சிலருக்கு எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை. இருந்தப்போதும் சிலர் தெளிவற்றதாக மேல் வயிற்றில் வலியை அனுபவிக்கின்றனர். இதோடு அவர்களுக்கு குமட்டல் மற்றும் பசியின்மை போன்றவை ஏற்படுகிறது. எனவே இதுப்போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.
அஜீரணம்:
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய், நமக்கு இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்று கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. நெஞ்செரிச்சல், செரிக்கப்படாத உணவு, ஏப்பம் போன்ற பிரச்சனைகள் இதன் அறிகுறிகளாக உள்ளது.
உணவு செரிமானப் பிரச்சனை:
உணவை செரிமானம் செய்வதிலும்,தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதிலும் சிக்கல் உள்ளதோடு, அடிவயிற்றின் மேல் வலது பக்கத்தில் வயிறு பெரிதாக இருக்கும் உணர்வுகளை நீங்கள் அனுபவிக்க நேரிடும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்தால், உங்கள் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஒருவேளை உங்களது சிகிச்சை தாமதமானால், அது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரைப்பை இரத்தப்போக்கு போன்ற பல சிக்கல்களுக்கு நம்மை ஆளாக்கிவிடும்.
NAFLD ஐ தடுப்பதற்கான வழிமுறைகள்:
இன்றைக்கு ஏற்படக்கூடிய பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்துவதற்கு ஆரோக்கிய உணவுகள் தான் பிரதானமாக உள்ளது. இதுபோன்று தான் ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய்க்கும். எனவே நீங்கள் உங்களுடைய உணவு முறையில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் அதாவது பயறு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதோடு ஆரோக்கியமான எடையை பராமரிக்க தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
NAFLD யாருக்கு அதிக ஆபத்து? உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு NAFLD பொதுவானது. ஆய்வுகளின்படி, வகை 2 நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு முதல் மூன்றில் இரண்டு பங்கு வரை NAFLD உள்ளது. அதிக கொழுப்பு, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், தூக்கத்தில் மூச்சுத்திணறல், செயலற்ற தைராய்டு மற்றும் செயலற்ற பிட்யூட்டரி சுரப்பி போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு இந்நோயால் அதிக ஆபத்து ஏற்படுகிறது.
மேலே கூறியது போல NAFLD அறிகுறிகள் செரிமானத்துடன் மட்டும் தொடர்புடையது அல்லது சோர்வு, தோல் மற்றும் சருமம் சிவத்தல், மஞ்சள் காமாலை, போன்ற பல அறிகுறிகளும் உள்ளன