கேரட் சட்னி

Ennum Ezhuthum
0
கேரட் சட்னி


 

தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 3-4
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - 2 இன்ச்
பூண்டு - 5 பல்
கேரட் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
சர்க்கரை - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.பின்பு அதில் கேரட், தக்காளி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு அரைத்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கி, அதை சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கேரட் சட்னி தயார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)