செப்பு பாத்திரத்தின் சிறப்பு

Ennum Ezhuthum
1 minute read
0
ads banner



நாம் இன்று தண்ணீர் பருக பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் உபகரணங்கள் 100% உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை. முக்கியமாக ஆண்களுக்கு ஆண்மையை பாதிக்கும் தன்மை உடையவை. 

ஆனால், நமது முன்னோர்கள் பயன்படுத்திய செப்புப் பாத்திரங்கள் இதற்கு நேர் எதிராக 100% ஆரோக்கிய நன்மைகளை தருபவையாக இருக்கின்றன. அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்... 

1) பாக்டீரியாக்களைக் கொல்லும்: செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து பருகுவதால் நீரில் இருக்கும் கிருமிகள் கொல்லப்படுகின்றன. முக்கியமாக வயிறு உபாதைகள் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கப் பயன்படுகிறது செப்புப் பாத்திரங்கள்.

 2) தைராய்டு: தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்த, சீரான முறையில் செயல் இயக்கம் நடைபெற, வெகுவாக உதவுகிறது செப்புப் பாத்திரங்கள். செப்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதனால் உங்கள் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது.

 3) மூட்டு வலி: செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் பருகுவதனால், மூட்டுவலியை குறைக்க, குணமடைய செய்ய முடியும். 

4) மூளையின் செயல்திறன்: மூளையில் நியூரான்களுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை மையிலின் என்னும் உறைமூடி பாதுகாக்கிறது. இந்த மையிலின் உறைகளைப் பாதுகாக்க செப்பு உதவுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

5) செரிமானம்: செப்புப் பாத்திரங்களில் நீரைப் பருகுவதனால் செரிமானப் பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு காண இயலும்.

 6) இரத்த சோகை: சிகப்பு இரத்த அணுக்கள் உடலில் பெருமளவில் உற்பத்தி செய்ய செப்பு நீர் பயன்படுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் நீர் பருகுவதனால் இரத்த சோகை கோளாறுக்கு சீரான தீர்வு காண முடியும்.

 7) புற்றுநோய் புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை உடலில் அண்டவிடாமல் தவிர்க்க செப்புப் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் நீர் உதவுகிறது. மற்றும் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது. 

8) இளமை காக்கும்: செப்பில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. இதனால், உங்கள் சருமத்தின் முதிர்ச்சி அடையும் தன்மையைக் குறைத்து உங்களை என்றும் இளமையாக வைத்துக்கொள்ள இது பயனளிக்கிறது.


ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 2, April 2025