ஹம்பி உயிரோட்டமான வரலாற்று பூமி. விஜயநகரப் பேரரசின் எச்சங்களை சரியாகப் பாதுகாத்து பராமரித்து இருக்க வேண்டும்.
ஆனால் சரியான பராமரிப்பு இல்லாததோடு, மக்கள் மத்தியில் அது தொடர்பான ஆர்வம் ஏற்படுகிற சூழலும் இல்லாதது வேதனையிலும் வேதனை. முதலாம் ஹரிஹரன், முதலாம் புக்கன், இரண்டாம் ஹரிஹரன் ஆகிய மூன்று அரசர்கள் காலத்தில் விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. அது வடமேற்கில் துங்கபத்திரா நதிக்கரை வரையும், வடக்கே கிருஷ்ணா நதிக்கரை வரையும், தெற்கே திருநெல்வேலி வரையும் பரவியிருந்தது என்பது வரலாறு. விஜயநகரப் பேரரசர்கள் தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் ஆதரித்திருக்கிறார்கள்.
அந்த அவையில் அல்லாசானி பெத்தண்ணா, தெனாலி ராமன் போன்றவர்களும் இடம் பெற்றனர். ஆண்டாளின் திருப்பாவையை தெலுங்கில் கிருஷ்ணதேவ ராயர் 'ஆமுக்த மால்யதா' என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார் என்றால், அவர் தமிழில் தேர்ச்சி பெற்றவராகத்தானே இருந்திருக்க வேண்டும்? 'தமிழகத்தில் இன்றைக்கு இருக்கின்ற காசி - கன்னியாகுமரி நெடுஞ்சாலை, கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூர், ராமேசுவரம், தஞ்சாவூர், சிதம்பரம், செஞ்சி வரை உள்ள சாலைகள் அக்காலத்தில் யானைப்படை, குதிரைப் படைகள் செல்வதற்காக கிருஷ்ணதேவராயரால் அமைக்கப்பட்ட சாலைகளாகும். அவையே இன்றைக்கு நம்முடைய போக்குவரத்துக்கு பயன்படுகின்றன' என்று எழுத்தாளர் ரா.கி.
ரங்கராஜன் தனது நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். சோழ அரசர்கள் ஆந்திரத்தில் திருமண உறவு கொண்டிருந்ததாக வரலாற்றுச் செய்திகள் உள்ளன. சோழ, பாண்டிய மன்னர்களுக்கு நெருக்கமாகவே இருந்ததுதான் ஆந்திர மண். விஜயநகரப் பேரரசு தோன்றுவதற்கும் அது வலிமை பெறுவதற்கும் அடிப்படைக் காரணமாக அதற்கு முன்பு நாட்டில் நிலவிய சூழ்நிலை இருந்திருக்கிறது.
கி.பி. 1296-ஆம் ஆண்டு, அலாவுதீன் கில்ஜி தேவகிரியின் மீது படையெடுத்து, இராமச்சந்திர தேவனுடைய செல்வங்களையெல்லாம் கொள்ளையடித்தார். பின்னர் தில்லி சுல்தானாகப் பதவி ஏற்றார். அலாவுதீன் கில்ஜியால் முதலில் தொடங்கப்பட்டு முகம்மது பின் துக்ளக் ஆட்சிக்காலம் வரை நடைபெற்ற படையெடுப்புகளால், தென்னிந்தியக் கோயில்களும், மடங்களும் கொள்ளையடிக்கப்பட்டு அவற்றில் இருந்த விலை உயர்ந்த செல்வங்களும் , கலைப்பொருள்களும் வடஇந்தியாவிற்கு யானைகள், ஒட்டகங்கள், குதிரைகளின் மீது ஏற்றி அனுப்பப்பட்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்றி அமைப்பதற்கு ஒரு புதிய சைவ சமய இயக்கம் ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் தோன்றியது. இவ்வியக்கத்திற்கு, புரோலைய நாயக்கர், காப்பைய நாயக்கர் ஆகிய இருவரும்தலைமையேற்றனர். தென்னிந்திய வரலாற்றில் 1336-ஆம் ஆண்டில் அமைக்கப் பெற்ற விஜயநகரப் பேரரசு தென்னிந்திய சமயங்கள், கோயில்கள்ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக ஏற்பட்டதென வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். 1336-ஆம் ஆண்டில் விஜயநகர சாம்ராஜ்யம் அமைக்கப்பட்டது.
கி.பி. 1336 முதல் 1646 வரை ஆட்சியில் இருந்தது விஜயநகரப் பேரரசு. சங்கம, சாளுவ, துளுவ, அரவீடு என வெவ்வேறு மரபுகளைச் சார்ந்தவர்களால் ஆளப்பட்டது. அன்றைய விஜயநகரத்தில் நகை சந்தை, மலர் சந்தை, காய்கறி சந்தை, பட்டு சந்தை என்ற பல சந்தைகளும், நீச்சல் குளங்களும் யானை, குதிரைகளைக் கட்டி வைக்க கட்டடங்களும், அறிஞர்கள் ஆய்வு நடத்த கூடங்களும் இருந்திருக்கின்றன.
அது மட்டுமல்ல, நகருக்குள் நுழையும்முன்னே சுங்கச்சாவடியும் இருந்திருக்கிறது. வைத்திய சாலைகள் நிரம்பிய நகரமாகவும் விஜயநகரம் இருந்திருக்கிறது. அந்த விஜயநகரம் இப்போது எங்குள்ளது? துங்கபத்திரா நதியின் குறுக்கே பெரிய அணைக்கட்டு கட்டப்பட்டு அந்நதியின் நீர் ஒரு பெரிய சமுத்திரம் போன்று ஹொஸ்பெட் என்ற ஊரில் தேங்கியுள்ளது.
ஹொஸ்பெட்டிற்குக் கிழக்கே ஐந்து மைல் தூரத்தில் விஜய நகரத்தின் அழிவுச் சின்னங்கள் துங்கபத்திரா நதியின் தென்கரையிலுள்ள ஹம்பி என்னுமிடத்தில் காணப்படுகின்றன. புகழ்பெற்ற விஜயநகரப் பேரரசின் தலைநகரான விஜயநகரம் ஹம்பிக்கு அருகில்தான் இருந்திருக்கிறது. துங்கபத்திரா ஆறு, விஜயநகரத்துக்கு இயற்கை அரணாக இருந்திருக்கிறது. சுற்றிலும் குன்றுகள் இருந்திருக்கின்றன.
எதிரிப் படைகள் வேகமாக முன்னேற முடியாமல் தடுக்கும் கரடுமுரடான நிலப்பகுதிகள் அங்கே இருந்திருக்கின்றன. சங்கம வம்சத்து முதல் மூன்று மன்னர்கள், செயற்கரிய செயல்களைச் செய்துள்ளனர். அவர்கள் ஆண்ட காலத்தின் தடயங்களாக நமக்கு கிடைத்திருப்பவை, ஹம்பி நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருக்கின்றன. அவற்றில் பல சிதைவுற்ற நிலையில் இருக்கின்றன.
கர்நாடக மாநிலத்திலேயே மிகப் பெரிய கோபுரத்தைக் கொண்ட கோயில் ஸ்ரீவிருபாக்ஷேஷ்வரர் சிவன் கோயில்தான். அதன் ராஜகோபுரம் 165 அடி உயரம் கொண்டது. இந்த கோபுரத்துக்கு 'பிஸ்டப்பையா கோபுரம்' என்ற பெயரும் உள்ளது. இந்த கோபுரத்தின் வாயில் வழியாக கோயிலுக்குள் சென்றால், 510 அடி நீளம் 130 அடி அகலம் உள்ள பெரிய உள் பிரகாரம் உள்ளது.
இதன் மத்தியில் துங்கபத்திரா ஆற்றுநீர் சிறிய வாய்க்கால் வழியாக ஓடுகிறது. பெரிய கோபுரம் தவிர இரண்டு சிறிய கோபுரங்களும் இந்த கோயிலில் உள்ளன. முதல் பிரகாரம் தாண்டி உள்ள கோபுரம் 'ராய கோபுரம்' என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ண தேவராயர் தனக்கு முடிசூட்டப்பட்ட நாளின் நினைவாக 1510-ஆம் ஆண்டில் இந்த கோபுரத்தைக் கட்டியதால் அதற்கு இந்த பெயர்.
வடக்கு திசையில் ஒரு கோபுரம் உள்ளது. அது 'கனககிரி கோபுரம்' என்றழைக்கப்படுகிறது. பிரகாரத்தைச் சுற்றிலும் பல சிறிய கோயில்கள் உள்ளன. பாதாளேஸ்வரர், முக்தி நரசிம்மர், சூரிய நாராயணர், சரஸ்வதி, கணபதி, வெங்கடேஸ்வரர், ஸ்ரீபார்வதி பம்பாம்பா, ஸ்ரீபுவனேஸ்வரி தேவி கோயில்கள் உள்ளன.
வெளிப்புறத்தில் 'மன்மத தீர்த்தம்' என்ற குளம் உள்ளது. அதற்கு சிறிது தூரத்துக்கு அப்பால் துங்கபத்திரா ஆறு ஓடுகிறது. மண்டபங்களில் மேல்பாகம் நீளமான பாறாங்கற்களால் மூடப் பெற்றுள்ளது. அதில் பண்டைய காலத்தின் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
கோயிலுக்கு வெளியே உள்ள ஹம்பி தேர் வீதியில் ஒரே பெரிய பாறையில் செதுக்கப்பட்ட 'எதிர் பஸவண்ணா' என்ற பெரிய நந்தி உள்ளது. துங்கபத்திரா ஆற்றின் அருகே உள்ள இன்னொரு கோயில் ராமர் கோயில். ஆற்றில் இருந்து பார்த்தால் 60- 70 அடி உயரத்தில் கோதண்டராமர் கோயில் தெரியும். மழைக்காலத்தில் இந்த கோயிலுக்கு உள்ளேயும் ஆற்றுநீர் வந்துவிடும்.
இந்த கோயிலின் முன்புறம் சிறிது உயரத்தில் யந்தோராத்தாரக ஹனுமார் கோயிலும் உள்ளது. இந்த ஹனுமார் கோயிலுக்கு அருகே அனந்தசயனகுடி ரங்கநாதர் கோயில் உள்ளது. இங்கே மூர்த்தி இல்லை. இந்த கோயிலிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் அச்சுததேவராயர் கோயில் உள்ளது.
1539-இல் கிருஷ்ணதேவ ராயரின் தம்பியான அச்சுததேவ ராயரால் கட்டப்பட்ட இந்தக் கோயிலிலும் இப்போது சிலைகள் இல்லை. கர்நாடக இசை மேதை புரந்தரதாசரின் நினைவைப் போற்றும் வகையில் 1540-ஆம் ஆண்டில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் புரந்தரதாசர் மண்டபத்தைக் கட்டியிருக்கிறார்கள். இப்போதும் அங்கே ஒவ்வோராண்டும் புரந்தரதாசர் விழா நடத்தப்படுகிறது. புரந்தரதாசர் மண்டபத்துக்கு சிறிது தொலைவில் விஜயவிட்டல ஆலயம் உள்ளது.
இந்தக் கோயிலில் கல் தூண்கள் உள்ளன. ஒரு கல் தூணில் 16 சிறிய கல் தூண்கள் சேர்ந்திருக்கின்றன. இந்த சிறிய கல் தூண்களைத் தட்டினால் ஒவ்வொரு தூணிலிருந்தும் ஒவ்வொரு விதமான இசை ஒலிக்கும். எல்லாத் தூண்களும் ஒரே கல்லினால் செதுக்கப்பட்டு உள்ளன.
ஒரே தூணில் வெவ்வேறு இசை என்பது இக்காலத்திலும் வியப்பளிப்பதாகவே உள்ளது. இந்த கோயிலில் கல்லினால் செய்யப்பட்ட ரதம் உள்ளது. இந்த கல் ரதம் தற்போது ஓடுவதில்லை. கல் சக்கரத்தில் வேலைப்பாடுகள் உள்ளன.
இந்த கல் ரதத்தின் வலது பக்கத்தில் உள்ள கல் மண்டபத்தை 1513 - இல் கிருஷ்ணதேவ ராயர் கட்டியதற்கான சான்றுகள் உள்ளன. ஹம்பியின் வலது புறம் ஹேமகூடம் என்ற சிறு மலையும், இடது புறம் ரத்னகூடம் என்ற சிறு மலையும் உள்ளன. ரத்னகூடத்தில் ஜைன மதத்தினருக்கான குருபீடம் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை பல மாநிலங்களில் இருந்து ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மலையில் ஒன்று கூடி விழா நடத்துகிறார்கள்.
18 அடி உயரம் உள்ள கணபதி சிலை உள்ள கடலைக்காய் கணபதி கோயிலின் மண்டபங்கள் இப்போதும் நல்ல முறையில் இருக்கின்றன. ஆனால் சிலை மட்டும் உடைந்து இருக்கிறது. ஹோஸ்பெட் - கமலாபுரம் அருகில் கணபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள 12 அடி உயர கணபதி, 'பெரிய கணபதி' என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு நேர்மாறாக 'கடுகு கணபதி' என்றும் சிலர் அழைக்கின்றனர். இவ்வாறு விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்கள், பல மண்டபங்கள், நீச்சல் குளங்கள்,அங்காடிகள், தர்பார் போன்ற பல நினைவுச் சின்னங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. வரலாற்றின் பொக்கிஷங்களான அவற்றில் பல சிதிலமடைந்து உள்ளன. வரலாற்றின் தடயங்களைப் பாதுகாப்பதில் ஆட்சியாளர்கள் அக்கறை காட்ட வேண்டும்.
விஜயநகரப் பேரரசு காலத்திற்குப் பிறகு ஆட்சி செய்த யாருமே அப்படிப்பட்ட அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதையே இந்த சிதிலங்கள் நமக்குக் காட்டுகின்றன. இந்த நிலை இனியும் தொடராமல் இருப்பதை தற்கால ஆட்சியாளர்களாவது உறுதி செய்ய வேண்டும்.