உலகில் அதிக மொழிகள் பேசும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 1,652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. உலகில் அதிக மொழிகள் பேசும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 1,652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் 19 ஆயிரத்து 569 தாய்மொழிகள் பேசப்படுகின்றன. மொத்த மக்கள்தொகையில் 96.76 % பேர் அட்டவணைப்படுத்தப்பட்ட 22 மொழிகளில் ஏதோ ஒன்றைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். அனைத்திந்திய அளவில் மொத்தம் 270 மொழிகள் அடையாளம் காணக்கூடிய தாய்மொழிகளாக உள்ளன. ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும். செம்மொழித் தமிழ் 5-ஆவது பெரிய மொழியாக உள்ள இந்திய நாட்டில் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 30 இலட்சத்து 6 ஆயிரத்து 368 எனவும், இந்தியாவில் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை 6.32 % ஆகும் என்றும் சொல்லப்படுகிறது. தமிழகத்தை விட சிறிய மாநிலமான புதுச்சேரியில்தான் தமிழ் பேசுபவர்கள் அதிகம் உள்ளதாகவும், புதுச்சேரியில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை 89.2 % என்றும், தமிழகத்தில் இது 86.7 % ஆகும் என்றும் குறிப்பிடப்படுகிறது. குட்டித் தீவுகளான அந்தமான நிக்கோபர் தீவுகளில் தமிழ் பேசுபவர்கள் எண்ணிக்கை 19.1 % அளவிலும், கேரள மாநிலத்தில் 2.1 % ஆகவும், சண்டிகரில் 0.8 % ஆகவும் இருப்பதாக அறியமுடிகிறது. கலைச்சொல்லியல் என்பது கலைச்சொற்களைப் பற்றிய ஆய்வு, கலைச்சொற்கள் தொடர்பான கோட்பாடு, கலைச்சொற்களைத் தரப்படுத்துதல், பயன்படுத்துதல் ஆகியவற்றினை உள்ளடக்கிய ஒரு துறையாகும்.
கலைச்சொல் ஆக்கமும், பயன்பாடும் தமிழ்மொழியில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஒரு செயற்பாடே. கடந்த சில நூற்றாண்டுகளில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகக் கலைச்சொற்களின் தேவையும் பயன்பாடும் அதிகரித்து உள்ளது. கலைச் சொல்லாக்கம் என்பது பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்கு இணையாகத் தாய்மொழியில் முன்பே உள்ள சொற்களை எடுத்தாள்வதும், தேவையெனில் பொருத்தமான புதிய சொற்களை உருவாக்குவது ஆகும். ஒரு மொழி, தன் வேர்ச்சொற்களைக் கொண்டு புதிய கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
கலைச்சொற்களை உருவாக்கும்போது நாம் கவனமாகச் செயல்பட வேண்டும். சொற்கள் வடிவில் சிறியதாகவும், எளிதாகப் பொருள் புரியும் வகையிலும் இருப்பது சிறந்தது. மேலும், ஓசை நயமுடையதாகவும், தமிழிலக்கண மரபுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும். சொற்களுக்குப் பொருள் கூறுவதே அகராதியின் நோக்கம் ஆகும்.
ஒரு சொல்லை மொழி பெயர்க்கும்போதோ அல்லது உருவாக்கும்போதோ அச்சொல் அதே போன்று வேறு பல சொற்களை உருவாக்க உதவ வேண்டும். எடுத்துக்காட்டாக, "லைப்ரரி' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு "நூலகம்', "நூல் நிலையம்' ஆகிய சொற்கள் கையாளப்படுகின்றன. இதில் நூலகம் எனும் சொல்லே மேலும் பல சொற்களை உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டது. இதுவே கலைச்சொல்.
லைப்ரரி - நூலகம்; லைப்ரரியன் - நூலகர்; லைப்ரரி சயின்ஸ் - நூலக அறிவியல். அறிவியல் உலகத்தில் பொதுவாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொருளுக்கு அவரவர்களின் பெயர்கள், அந்நாட்டின் மொழிச்சொல், குடும்பப் பெயர், ஊர்ப்பெயர் எனப் பல பெயர்களை வைத்துள்ளார்கள். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் வேற்றுமொழி வழங்கும் நாடுகளுக்கு வரும்போது அந்தப் பெயராலே அழைக்கப்படுகின்றன. இது உலகம் முழுவதும் பொருந்தும்.
அந்தச் சொற்களைத்தான் நாம் "அறிவியல் கலைச்சொல்' என்கிறோம். அப்படிப்பட்ட கலைச்சொற்களுக்குத் தமிழ் மொழியில் சொற்களைத் தகுந்தாற்போல் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளனர் நமது தமிழ் அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும். அச்சொற்களைப் பொதுமக்களும் மொழிநலம் விரும்பிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தொன்மை வாய்ந்ததும், இலக்கண- இலக்கிய வளம் மிக்கதும், பரந்துபட்ட மக்கள் வழக்கும் கொண்ட தமிழ்ச் சொல்லமைப்பை, அதன் பொருளை நுட்பமாக உணர்த்தவல்லவை அகரமுதலிகள் ஆகும்.
தமிழில் கிடைத்துள்ள மிகத் தொன்மையான இலக்கணநூலான தொல்காப்பியத்தில் சொல்லதிகாரத்தின் உரியியலிலும், மரபியலிலும் சில சொற்களுக்கான பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளதிலிருந்து அகராதிக்கான தொடக்கப்புள்ளி தொல்காப்பியம் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். பழங்காலத்தில் நிகண்டு, உரிச்சொல், உரிச்சொல் பனுவல், அரும்பதவுரை, அருஞ்சொற் பொருள் விளக்கம் எனப் பல சொல்லாட்சிகள் நிலைபெற்றுள்ளன. "அகர முதல னகர இறுவாய்' என்ற தொடரால் அகரவரிசையின் தொடக்கமும் னகர வரிசையில் முடிவும் அமையும் நிரல் வரிசை நெறிமுறைக் கோட்பாடு அகராதியின் களமாக அமைகிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திவாகர நிகண்டு, 9,500 சொற்களைக் கொண்டது.
பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிங்கல நிகண்டு, 14,700 சொற்களைக் கொண்டது. 16-ஆம் நூற்றாண்டில் உருவான சூடாமணி நிகண்டு 11,000 சொற்களைக் கொண்டு உருவானது. சிதம்பர இரேவண சித்தரால் உருவாக்கப்பட்ட அகராதி நிகண்டு அகரம் முதலாகச் சொல் நிரல் அமைப்பில் ஒப்புநோக்கில் அமைந்தது. 1732-இல் தொகுக்கப்பெற்று 1824-இல் வெளிவந்த வீரமாமுனிவரின் "சதுரகராதி' மனனம் செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து எளிய சொற்களைக் கையாண்டு அகராதிக் கலை வளர்ச்சியடையக் காரணமாய் அமைந்தது.
1830-இல் இராட்லர் தமிழ் - ஆங்கில அகராதியைத் தொகுத்தார். இதைத் தொடர்ந்து வின்ஸ்லோவின் "அமெரிக்கத் திருச்சபைப் பேரகராதி' 1842-இல் வெளிவந்தது. தமிழ்மொழி ஆர்வம் மக்களிடம் பெருகவும், தமிழ்ச் சொற்களுக்குத் தமிழில் பொருள் கூறும் தேவையை நிறைவு செய்யவும் ஒரு மொழி அகராதி உருவாக்கம் பெற்றது. அவ்வகையில் 1918-இல் கா.
நமச்சிவாயரால் தமிழ்மொழி அகராதி தொகுத்து வெளியிடப்பட்டது. சுருக்கமாகவும் விரைந்தும் பொருள் கொள்ளத் தக்க வகையில் "கழகத் தமிழ் கையகராதி' 1940-இல் வெளி வந்தது. இது மாணவரிடையே பெரிதும் பயன்பாட்டில் இருந்தது. தமிழ்மொழியின் தொன்மையையும், உலக மொழிகளில் அதன் கொடை, பயன்பாட்டு பரவலாக்கம், அரசியல், வரலாறு, அயலக வாணிபம் உள்ளிட்ட மக்கள் வரலாற்றையும் அறிந்துகொள்வதற்குத் தமிழ்மொழியில் சொற்பிறப்பியல் அகராதிகள் மிகத் தேவையாகின்றன.
பன்மொழியறிவோடு பைந்தமிழ் ஆய்ந்த தேவநேயப் பாவாணர் தமிழுலகிற்கு மொழிநூலறிவோடு சொற்பிறப்பியல் அகராதிக் கோட்பாடுகளையும் வளர்த்தெடுத்து வழங்கினார். மொழியில் உள்ள சொல் எந்த வேர்ச்சொல்லிலிருந்து, எங்கே, எப்படித் தோன்றி வளர்ந்தது என்பதைக் கண்டறிந்து கூறுவதே சொற்பிறப்பியல். ஒரு சொல்லின் பொருளைக் காணும்போது அச்சொல் தோன்றிய மொழியில் அது என்ன பொருள் உணர்த்திற்று எனக் காண்பது அம்மொழிக்கு இன்றியமையாதது. தமிழ் பல மொழிகளுக்குத் தாய்.
"திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் ஒன்று' என்கிறார் கால்டுவெல். பாவாணர், "ஆதி' என்ற சொல்லை வடமொழி எனக் கருதியதால் அகராதியை "அகரமுதலி' என்றார். தமிழில் இடுகுறிச் சொற்கள் இல்லை. திரவிடச் சொற்களுக்குத் தமிழ் உதவிகொண்டே வேர்காண இயலும் என்ற கருத்துடையவர் தேவநேயப் பாவாணர்.
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்ற தொல்காப்பியரின் அடியொற்றி, தேவநேயப் பாவாணரின் வேர்ச்சொல்லாய்வுக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழின் தனித்தன்மை சொற்பிறப்பியல் அகரமுதலியில் நிறுவப்பட்டுள்ளது. "தமிழ், ஞால முதன்மொழி, திராவிடத்திற்குத் தாய், ஆரியத்திற்கு மூலம்' என்னும் பாவாணர் கொள்கை நெறிப்படி கூட்டுச் சொற்கள், மரபு வினைகள் ஆகிய அனைத்துச் சொற்களுக்கும் சொற்பிறப்பினைக் கண்டறியும் முனைப்பால் உலக மொழிகளில் தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதை எளிதாகக் கண்டறியச் சொற்பிறப்பியல் அகரமுதலி வழிகாட்டுகிறது. இலக்கியச் சொற்கள் மொழியின் இன்றியமையாத கூறுகளாகும். அதே சமயத்தில் இலக்கிய ஆட்சிகள் மட்டும் மொழியின் முழுத் தன்மையைக் காட்டுவன ஆகாது.
எனவே, அதில் கிளை வழக்குகளும் இடம் பெற வேண்டும். சொல் உணர்த்தும் பொருளை நிறைவாகவும் தெளிவாகவும் தெரிந்துகொள்ளச் சொற்பிறப்பு உதவுகிறது. இலக்கியம், கல்வெட்டு, நாட்டுப்புற இலக்கியம், பேச்சுவழக்கு என மொழியின் அனைத்துப் பகுதிகளிலும் சொற்றொகுப்பு நடைபெற வேண்டும். பொருளியல், குமுகாய நிலை போன்ற காரணங்களால் ஏற்படும் வட்டார வழக்கு வேறுபாடுகளையும் காட்டுவதாக அகரமுதலி அமைதல் வேண்டும்.
சொற்களே மொழிக்கு அடிப்படை. சொற்களைப் பாதுகாத்தால் மொழியைப் பாதுகாக்கலாம். சொற்கள் பெருகப் பெருக மொழியும் மேம்படும். தேவநேயப் பாவாணர் சொற்பிறப்பியல் தொடர்பாக வேர்ச்சொல் கட்டுரைகள், ஆய்வு நூல்கள் என வெளியிட்டார்.
எனவே, இனி வரும் தலைமுறையினர், அகராதி படிப்பதிலும் படைப்பதிலும் ஆர்வம் கொண்டு, நற்றமிழின் சொற்பிறப்பியலில் நாட்டம் கொண்டு, தனித்தமிழ்ப் பயன்பாட்டில் தணியாத தாகம் கொண்டு, மொழியியலிலும் முனைப்புகாட்டி, கலைச்சொல்லாக்கத்திலும் தன்திறன் நாட்டி அன்னைத் தமிழுக்குச் சொல்வளம் சேர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் தேவநேயப் பாவாணரின் தமிழ்ப் படைப்புகளை ஆழக் கற்க வேண்டும்