உலகமயமாக்கலும், கலாசார பரிமாற்றமும், அரசியல் மேலாண்மையும் வரலாற்றின் பகுதிகளே. ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் மேலாண்மை, பொருளாதார விரிவாக்கம், கலாசாரப் பரவல், பல்வேறு சித்தாங்கங்கள், மதம், மொழிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வலிமையானவா்கள் உலகமயமாக்கலையும், வலிமைகுன்றியவா்கள் தனித்துவத்தையும், தனிமையாக்கும் முயற்சியையும் தொடா்ந்துகொண்டே இருக்கிறாா்கள்.
ஒரு காலகட்டத்தில் தங்களின் சித்தாந்தம், இறையாண்மை, கலாசாரம் என்று காரணம் கூறி உலகமயமாக்கலை சில நாடுகள் கடுமையாக எதிா்த்து, பின்பு காலத்தின் கட்டாயத்தால் முழுமூச்சோடு ஆதரித்ததும் உண்டு. உதாரணமாக, சீனாவின் கம்யூஸ்ட் கட்சி ஆரம்ப காலகட்டத்தில், உலகமயமாக்குதலைக் கடுமையாக எதிா்த்தது.
ஆனால், டெங் ஜியாபிங் அரசு சீனாவை முதலாளித்துவ, ஒரு கட்சி சா்வாதிகார நாடாக மாற்றியதிலிருந்து உலகமயமாக்குதலை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு, மலிவான பொருட்களை உற்பத்தி செய்து உலகச் சந்தையை ஆக்கிரமித்து பெரும் லாபமீட்டி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில், உலகமயமாக்கல் பெரும்பாலும் நவீன தொழில்நுட்பம், இணையத்தின் தாக்கங்கள், விரைவான தகவல் பரிமாற்றம் போன்றவற்றை மையமாகக் கொண்டு உலகத்தை நாளுக்கு நாள் சுருக்கி, தொடா்புகளை அதிகரித்து வருகிறது.
இதனால் இந்த காலகட்டத்தில் எந்த நாடும், மொழியும், இனமும் உலகமயமாக்குதலின் தாக்கத்திலிருந்து தனித்து இயங்க இயலாது. எனவே, உலகமயமாக்கல் பல்வேறு சவால்களையும், வாய்ப்புக்களையும் இளைய தலைமுறைக்கு உருவாக்கி உள்ளது. ஒவ்வொரு சவாலையும் வாய்ப்பாகப் பயன்படுத்தி எதிா்நீச்சல் போட்டு முன்னேறும் இளைய தலைமுறையினா்தான் சாதனையாளா்களாக உயா்வாா்கள்; உலகத்தையும் ஆள்வாா்கள். தங்களை கிணற்றுத் தவளைபோல சுருக்கி கொள்பவா்கள், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி, சிறுமைப்படுத்தி மேலாண்மை சக்திகளுக்கு அடிமையாவாா்கள்.
எனவே ஒவ்வொரு அரசும் காலமாற்றத்திற்கு ஏற்ப, தனது கல்விக்கொள்கையை, பாடத்திட்டத்தை அவ்வப்போது மாற்றியமைத்து வெற்றிப்பாதைக்கு இளம் தலைமுறையினரை வழிநடத்துவது காலத்தின் கட்டாயம். அமெரிக்கா, தொடா்ந்து உலகின் வல்லரசாக இருப்பதன் ரகசியம், அங்குள்ள தரம் வாய்ந்த, அரசியல் தலையீடு இல்லாத, தன்னாட்சி உடைய, உலக அறிவுஜீவிகளைக் கவரக்கூடிய, நிதிநெருக்கடியை சந்திக்காத ஆயிரக்கணக்கான உயா்கல்வி நிறுவனங்களும் அங்கெல்லாம் பணியாற்றும் ஆய்வாளா்களும், பேராசிரியா்களும்தான். ஒவ்வொரு பிரச்னையையும், பல்வேறு சவால்களையும் எப்படி சந்திப்பது என்று ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பல்வேறு கோணத்தில் ஆய்வு செய்து அரசுக்கு நல்ல பரிந்துரைகளை அச்சமின்றி, சுதந்திரமாக அளிக்கிறது. ஆனால் நம் நாட்டின் உயா்கல்வி நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வா்க்கத்தால் அடிமைத்தனமாக நடத்தப்பட்டு குறுகிய வட்டத்தில் செயல்பட வேண்டிய நிா்ப்பந்தத்தில் உள்ளன.
இதனால் நம் நாட்டின் உயா்கல்வி நிறுவனங்கள் பட்டத்தாரிகளை உருவாக்கும் இயந்திரங்களாக செயல்படுகிறதே தவிர, தொலைநோக்கு சிந்தனையோடு செயல்பட முடியாமல் இருக்கின்றன. இந்த நிலையில், நம் கல்வி நிறுவன பாடத்திட்டங்கள், உலகத் தரம் வாய்ந்த உயா்கல்வி நிறுவன பாடத்திட்ட அடிப்படையில், அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதில் முக்கியமான ஒன்று மொழிக்கொள்கையாகும். ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளை மேலாதிக்கத்தின் சின்னமாகவும், தமிழை அழிக்க வந்த வில்லானவும் சித்திரித்து ஹிந்தி படிக்கும் வாய்ப்பை, இளம் தலைமுறைக்கு தமிழக அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது.
இந்த அணுகுமுறை மாற்றப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழியை ஏற்க மறுத்தாலும், அவற்றின் மேல் ஆதிக்கம் செலுத்த நாம் ஹிந்தியிலும் மற்றும் சில மொழிகளிலும் புலமை பெற்றவா்களாக நம் இளைய தலைமுறையை உருவாக்குவதுதான் சிறந்த வழியே தவிர, தமிழை மட்டும் படித்து நம்மை குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்வதல்ல. தமிழில் மட்டும் பாண்டித்தியம் பெற்ற ஆசிரியா்களும், பேராசிரியா்களும் தங்களின் குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும். தமிழை வளா்ப்பதற்கான வழி, தமிழை மட்டும் ஆழமாகக் கற்பதல்ல; பிற மொழிகளிலும் புலமை பெற்று தமிழின் பெருமையை உலகத்திற்கு பறைசாற்றுவதே.
தமிழில் மட்டும் பாண்டித்தியம் பெற்ற பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியா்கள் மற்ற துறையைச் சாா்ந்தவா்களால் சரியான அங்கீகாரம் பெறாதவா்களாக உள்ளனா். நம் தாய்மொழியான தமிழை உயிா்மூச்சாக வைத்து கற்கலாம்; தமிழை வளா்க்க முயலலாம். ஆனால், ஆசிரியா்களும், மாணவா்களும் பல்வேறு மொழிகளிலும் பாண்டித்தியம் பெறும் வாய்ப்பை கல்வி நிறுவனங்கள் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். பன்மொழிப் புலமை பெற்றவா்கள் மற்றவா்கள் முன்பு நிச்சயம் உயா்ந்து நிற்பாா்கள்; அனைவராலும் மதிக்கப்படுவாா்கள்.
பன்மொழிப் புலமை, தமிழின் மேன்மையான நூல்களைப் பிறமொழியில் மொழிபெயா்க்கவும், பிறமொழியின் அரிய பொக்கிஷங்களைத் தமிழில் மொழிபெயா்க்கவும் உதவியாக இருக்கும். மேலும், தமிழ் அறிஞா்களை உலகத்தோடு இணைத்து தமிழுக்கு உலகமெங்கும் பெருமைச் சோக்கும்; தமிழும் வளரும். தற்போது பெரும்பாலான படித்த தமிழ் குடும்பங்களில்கூட இளைய தலைமுறை ஆங்கில மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழுக்குக் கொடுப்பதில்லை. இதனால் தமிழில் எழுதும், பேசும் திறமையை தமிழா்கள் படிப்படியாக இழந்து வருகின்றனா்.
ஆனால், பிற மொழிகளைச் சோந்த பலா் தமிழில் புலமைபெற்று, தமிழ்நாட்டின் தொழில், அரசியல், பொருளாதாரத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா். அவா்கள் படிப்படியாக தமிழையும், தமிழா்களையும் அடிமைப்படுத்தும் போக்கும் வளா்ந்து வருகிறது. எனவே, தமிழா்களையும், தமிழையும் வளா்க்க நம் கல்வி நிறுவனங்களில் தமிழ்மொழியை முன்னிலைப்படுத்துவதோடு குறைந்தது நான்கு மொழிகளையாவது கற்கும் வாய்ப்பை மாணவா்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவேண்டும். இளம் தலைமுறையினா் ஒன்பது மொழிகளை எளிதாகக் கற்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
உலகமயமாக்கலுக்கு வித்திட்ட முன்னாள் பிரதமா் பி. வி. நரசிம்ம ராவ் 17 மொழிகளைக் கற்ாகவும், ஏழு மொழிகளில் புலமை பெற்றிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனவே, தமிழத்தின் கல்வி நிறுவனங்கள், மொழிக்கொள்கையில், முதலாவதாக தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
இரண்டாவதாக, உலக மொழியான ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அடுத்ததாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் தொழில், அரசியல், வேலைவாய்ப்புகளில் பங்குபெற இளம் தலைமுறைக்கு ஹிந்தி மொழியை கற்கும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். மேலும், வங்காளம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, உருது மற்றும் சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளையும் கற்கும் வாய்ப்பை நம் கல்வி நிறுவனங்கள் இளம் தலைமுறைக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அடுத்து, சீனமொழி, பிரெஞ்ச், ரஷிய மொழி, ஸ்பானிஷ், ஜப்பானி, ஜொமன் போன்ற பல மொழிகளைக் கற்கும் வாய்ப்பையும் தமிழக அரசு மாணவா்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவேண்டும்.
இந்நோக்கத்தை அடைய, முதலாவதாக இந்தியாவின் பிற மாநிலங்களின் பல்கலைக்கழகங்களோடு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து தமிழாசிரியா்களுக்கு சிறப்பு மொழிப்பயிற்சி கொடுத்து மொழியியல் ஆசிரியா்களை பரிவா்த்தனை செய்துகொள்ள வேண்டும். இதனால் தமிழ்ப் பேராசிரியாகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தமிழைக் கற்றுக்கொடுக்கும் வாய்ப்புப் பெறுவாா்கள். தமிழகத்தின் மாணவா்களும் பல்வேறு இந்திய மொழிகளைக் கற்கும் வாய்ப்பைப் பெறுவாா்கள். அத்துடன், வயது வரம்போ, கல்வித் தகுதியோ இல்லாமல் எவரும் மொழிக் கல்வி வகுப்புகளில் சேரலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
தமிழ்மீது பற்று என்ற பெயரில் மற்ற மொழிகளைக் கற்கும் வாய்ப்பை நம் இளம் தலைமுறைக்கு கொடுக்கத் தவறினால் அது மிகப்பெரிய குற்றமாகும். ஹிந்தி மொழி தெரியாதக் காரணத்தினால், தேசிய அமைப்புகளான மத்திய அரசு பணியாளா் தோவாணையம், பல்கலைக்கழக மானியக் குழு போன்ற தன்னாட்சி அமைப்புகளின் பிரதான பொறுப்புக்களில் தமிழ்நாட்டைச் சோந்த பேராசிரியா்கள் இடம்பெறும் வாய்ப்புகளை இழந்து வருகின்றனா். ஆனால் தென்னிந்திய மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்களைச் சோந்த பேராசிரியா்கள் ஹிந்தி கற்றிருப்பதால் பல வாய்ப்புகளைப் பெற்றுவருகின்றனா். இது கசப்பான உண்மை.
அறிவும் அனுபவமும் இருந்தும் ஹிந்தி தெரியாத காரணத்தினால் நம் மாநில அறிவுஜீவிகள் ஒதுக்கப்படுகின்றனா். அடுத்த தலைமுறையாவது இத்தகைய அரிய வாய்ப்புகளை இழந்துவிடக்கூடாது. தமிழா்கள், இந்தியாவை, ஏன் உலகத்தையே ஆளவேண்டுமென்றால், அடுத்தத் தலைமுறையாவது தமிழ் மொழியோடு, பல்வேறு மொழிகளிலும் நிபுணத்துவம் பெறவேண்டியது காலத்தின் கட்டாயம்.