மூட்டுவலியால் உட்கார்ந்து எழுந்திருப்பதில் சிரமம்... தீர்வு உண்டா?

Ennum Ezhuthum
0

 

Doctor Vikatan: மூட்டுவலியால் உட்கார்ந்து எழுந்திருப்பதில் சிரமம்... தீர்வு உண்டா?

ஃப்ரோஸன் ஷோல்டர் மாதிரியே `லாக்டு நீ' எனப்படும் முழங்கால் மூட்டு மற்றும் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

 

வலியோ, வீக்கமோ இல்லை. ஆனாலும் வேகமாக நடக்க முடிவதில்லை. 

 

முழங்காலை எளிதாக நீட்டி, சம்மணமிட்டு ஐந்து நிமிடங்கள்கூட தொடர்ந்து உட்கார முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு?

முனியா - மாடல், விகடன் இணையத்திலிருந்து.

 


பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மூட்டு மாற்று அறுவைசிகிச்சை மருத்துவர் ஏ.ஆர்.கேசவன்

 

மூட்டு மாற்று அறுவைசிகிச்சை மருத்துவர் ஏ.ஆர். கேசவன் சென்னை

மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள் நகரும்போது ஒன்றோடொன்று உராயாமலிருக்க அந்தப் பகுதியில் மூட்டு சவ்வில் இருந்து ஒருவித திரவம் சுரக்கும். இந்த சவ்வு வீங்கும்போதோ, குறுத்தெலும்பு சேதமாகி ஓட்டை விழும்போதோ, அதைத் தேய்மானம் என்கிறோம். அதனால் உராய்வு அதிகமாகிறது. அசைவு குறைகிறது. அதனால் கால்களை நீட்டி, மடக்குவது கடினமாகிறது.


முழங்கால் மூட்டு பாதிப்பு வந்துவிட்டால் முதலில் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு மூட்டு அழற்சி எனப்படும் தேய்மானம் காரணமாகவே மூட்டு வலி வரும். வயதாக, ஆக இந்தத் தேய்மானம் ஏற்படுவது சகஜம். சிலருக்கு இந்தத் தேய்மானம் அதிகமாக இருக்கலாம், சிலருக்கு குறைவாக இருக்கலாம்.

 

Joint

ருமட்டாயிடு ஆர்ரைட்டிஸ் எனப்படும் கீல்மூட்டு வாதம், தசைநார் கிழிவது, காயம்படுவது போன்றவற்றின் விளைவாகவும் வலி வரலாம். இன்ஃபெக்ஷன் காரணமாக மூட்டுத் திசுக்களும் பாதிக்கப்பட்டு, மூட்டு வலி வரலாம். அதற்கு முதல் வேலையாக உடல் பருமனைக் குறைக்க வேண்டும். உடல் பருமன் அதிகமானால், மூட்டுகளின் மேல் அழுத்தம் கூடி, வலியை அதிகரிக்கும்.


அடுத்து, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்க வேண்டும். உடற்பயிற்சி என்றதும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்க வேண்டாம். மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பயிற்சிகள் சில உள்ளன. மருத்துவர் அல்லது உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையோடு தகுந்த பயிற்சிகளை மட்டும் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங் போன்றவற்றைச் செய்யலாம்.

 

cycling

குடி மற்றும் சிகரெட் பழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இவை இரண்டும் மூட்டு இணைப்புகளைப் பெருமளவில் பாதிக்கக்கூடியவை. சில நேரங்களில் மருத்துவர் மாத்திரை அல்லது ஊசிகளைப் பரிந்துரைப்பார். பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து, மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகூட தேவைப்படலாம்.

Post a Comment

0Comments

Post a Comment (0)