முகத்தின் அழகை அதிகரிக்க பெண்கள் பல்வேறு வகையான பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் பல சமயங்களில் இவற்றைப் பயன்படுத்துவதால் முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.
இதற்காக நீர் பெரிதாக எதையும் வங்கவே தேவையில்லை. உங்கள் சமையலறையில் இருக்கும் சில பொருட்களை சரும பராமரிப்பில் பயன்படுத்தலாம். இந்தியாவின் சமையல் அறையில் பல வகையான மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.
இலவங்கப்பட்டை மற்றும் நட்சத்திர சோம்பு உணவில் பயன்படுத்தப்படுகிறது,இவற்றால் உணவின் சுவை கூடுகிறது. இதனுடன், இலவங்கப்பட்டை மற்றும் நட்சத்திர சோம்பும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது பருக்கள், வறண்ட சருமம், சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுவித்து அற்புதங்களை நிகழ்த்துகிறது. இலவங்கப்பட்டை ஆண்டி ஏஜிங் வாட்டரை எப்படி தயாரித்து பயன்படுத்த வேண்டும் என்பதை இன்று அறிந்து கொள்ளலாம்
முக சுருக்கங்களை நீக்கும் நீரை தயாரிக்க தேவையான பொருட்கள்
நட்சத்திர சோம்பு - 3
இலவங்கப்பட்டை - 1 அங்குலம்
தண்ணீர்- 500 மில்லி
முதுமையை விரட்டும் மேஜிக் தண்ணீரை தயாரிக்கும் முறை:
முதலில், மூன்று பொருட்களையும் பாத்திரத்தில் சேர்த்து கொதிக்க விடவும். இவற்றை குறைந்த தீயில் கொதிக்க விடவும். தண்ணீரின் நிறம் மாறியதும், அடுப்பை அணைக்கவும். இப்போது இந்த தண்ணீரை குளிர்விக்கவும். ஆறிய பிறகு பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைக்கவும். இப்போது, உங்கள் முதுமையை விரட்டும் மேஜிக் நீர் தயாராக உள்ளது.
மேஜிக் நீரை பயன்படுத்தும் முறை
முக சுருக்கங்களை நீக்கும் நீரை பயன்படுத்துவதற்கு முன் முகத்தை சுத்தம் செய்யவும். இப்போது நீங்கள் இலவங்கப்பட்டை தண்ணீரை பருத்தியில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவவும். இரவு முழுவதும் அப்படியே விடவும். காலையில் சாதாரண நீரினால் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தின் சுருக்கங்கள் நீங்குவதோடு, பருக்கள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவு பெறும்.