சிக்கன் கிரேவி

Ennum Ezhuthum
0

 

சிக்கன் கிரேவி

சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 500 கிராம்
தயிர் - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
பெரிய தக்காளி - 3
காஷ்மீரி மிளகாய் - 2
முந்திரி - 12
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1/2 இன்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
அன்னாசிப்பூ - 1
கறிவேப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனில் தயிர், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சீரகம், கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து கிளறி, ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து 3-5 நிமிடம் வதக்க வேண்டுங்ம. பின் ஒரு கப் நீரை ஊற்றி குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான சிக்கன் கிரேவி தயார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)