மத்திய,
மாநில அரசுகள், வாகன தயாரிப்பாளர்கள், மற்றும் அரசுப் போக்குவரத்துக்
கழகங்கள் மாற்று எரிபொருளுக்கு மாறுவதற்கான நடவடிக்கை எடுத்தால்
சமூகத்திற்கு மிகுந்த பயன் ஏற்படும். கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு
என்று சுதந்திர இந்தியாவிற்கு முன்னர் மகாத்மா காந்தியடிகள் கூறினார்.
அப்போது நகரங்களில் மக்கள் தொகை 30% ஆகவும் கிராமங்களில் மக்கள் தொகை 70%
ஆகவும் இருந்தது. ஆனால், தற்போதுள்ள மத்திய அரசு எடுத்து வரும்
தாராளமயமாக்கல் நடவடிக்கை தொடர்ந்தும், அதிகரித்து வரும்
மக்கள்தொகையினாலும், மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் அதிகரித்த
நகரமயமாக்கல் நடவடிக்கையினாலும் தற்போது கிராமங்களில் உள்ள மக்கள் நகரங்களை
நோக்கி படையெடுக்கிறார்கள். இதனால், நகரங்களில் மக்கள்தொகை 50% ஆகவும்
கிராமங்களில் மக்கள் தொகை 50% ஆகவும் இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால்
2050-இல் நகரங்களில் மக்கள்தொகை 70% ஆகவும் கிராமங்களில் மக்கள்தொகை 30%
ஆகவும் மாறும். மாற்று எரிபொருள் அவசியம் ஏன்?
பின்னணி காரணங்கள் என்ன?
மேல்குறிப்பிட்ட விஷயங்களினால் நகரங்களில் மிகக் கடுமையான சிக்கல்களை
சந்திக்கும் நிலை உருவாகி வருகிறது. இதனால் பொதுப் போக்குவரத்திலும்
கொள்கை, இலக்கு என அதற்கான நடவடிக்கைகள் மாறுகின்றன. தற்போது
பொதுப்போக்குவரத்தின் கொள்கை என்பது மக்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு
எளிதில் பயன்படுத்தக்கூடிய அளவில் இலக்கினைக் கொண்டதாகவும் அதற்கான
நடவடிக்கையாக சாலை நெரிசலைக் குறைக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்ம்
சரியான போக்குவரத்தை உறுதி செய்யவும் வேண்டியுள்ளது. மேலும், சரக்கு
மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்தில் டீசல், பெட்ரோலின் பயன்பாடு
அதிகரிக்கிறது. தொடர்ந்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால்
டீசலின் பயன்பாடு அதிகரிக்கிறது. இதன் விளைவாக அரசின் கச்சா எண்ணெய்
இறக்குமதி அதிகரித்து , நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP)
பாதிக்கப்படுகிறது. மேற்கூறிய விளைவுகளினால், இந்தியாவில் டீசல்,
பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் தேவை அவசியமாகிறது. இந்த பெட்ரோல்,
டீசலினால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. நாம் ஏன் டீசலை
பயன்படுத்தக்கூடாது என்றும் டீசலினால் ஏற்படும் விளைவுகளும் கீழ்
கொடுக்கப்பட்டுள்ளது. • இந்தியா மொத்த மின் உற்பத்திக்கு 85% நிலக்கரியைச்
சார்ந்துள்ளது. • இரண்டு சக்கர, மூன்று சக்கர, கார்கள் மற்றும் கனரக
வாகனங்கள் எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பகுதியை பயன்படுத்துகின்றன. •
2013-14ல் பெட்ரோலிய இறக்குமதி 77% சார்ந்து இருந்தது. தற்போது, இது
உயர்ந்து 2021-22-ல் 85% ஆக இருந்தது. • எரிபொருள் தேவைக்காக இந்தியா
வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்திருப்பது புவிசார் அரசியல் அபாயங்களுக்கு
ஆளாக நேரிடுகிறது. • டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 94.28 என அதிகமாக
இருப்பதால் இயக்கச் செலவும் அதிகமாகிறது, இதன் விளைவாக நாம் மாற்று
எரிபொருளுக்கு மாறுவதற்கு நிர்பந்தம் இருக்கிறது. இதையும் படிக்க | 450
ஆண்டுகளாக மது, புகைக்குத் தடை! தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் தெரியுமா?
டீசலினால் தமிழக போக்குவரத்து கழகங்களில் ஏற்படுத்தும் தாக்கங்கள்? மத்திய
அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் இந்தியாவில் உள்ள போக்குவரத்துக்
கழகங்களில் மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் போக்குவரத்து
கழகங்கள் அரசு நிர்ணயித்த பயணக் கட்டணத்தில் சராசரியாக கிலோமீட்டருக்கு ரூ.
25-லிருந்து ரூபாய் 30-க்குள் வருமானம் ஈட்டுகிறது .இதில் பெரும்பாலும்
பொதுப் போக்குவரத்து பேருந்துகள் எரிபொருள் மைலேஜ் ஒரு லிட்டருக்கு
குறைந்தபட்சமாக 4.5 முதல் 5.5 வரை சராசரியாகக் கிடைக்கிறது. இதனால்
போக்குவரத்துக் கழகங்கள் சராசரியாக கிலோமீட்டருக்கு ரூ. 23 செலவழிக்கிறது.
போக்குவரத்துக் கழகம் ஈட்டும் ரூபாய் 30-இல் ரூ. 23-வரை எரிபொருளுக்கே
சென்றுவிடுகிறது. மீதம் உள்ள தொகை ரூ. 7 வைத்துக்கொண்டு போக்குவரத்துக்
கழகங்கள் தங்களது மற்ற செலவினங்களுக்கு திண்டாடுகிறது . தற்போதைய ஒரு
லிட்டர் டீசலின் விலை ரூ. 94.27.இதனால் தமிழக அரசு ரூ. 66/-க்கு மேல் உள்ள
தொகையினை மொத்த டீசலின் பயன்பாட்டுக்கு கிட்டத்தட்ட லிட்டருக்கு ரூ. 28.27
என்ற அளவில் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்குகிறது . மேலும், தமிழ்நாடு
அரசு பெண்களுக்கான இலவச பயணத்திற்கும் ஒவ்வொரு பெண் பயணியின் ஒரு
பயணத்திற்கும் ரூ. 15 வழங்குகிறது. மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கான இலவசப்
பயணம், மாற்றுத்திறனாளிககளுக்கான இலவசப் பயணம், முன்னாள் பேரவை
உறுப்பினர்களுக்கான இலவசப் பயணம் போன்றவற்றுக்கு நிதி அளிக்கிறது. இதனால்
போக்குவரத்துக் கழகங்கள் போதிய நிதியின்றி தள்ளாடுகிறது. இதனால்
தமிழ்நாட்டு அரசின் போக்குவரத்துத் துறைக்கு ஏராளமாக நிதியுதவி
செய்யப்படுகிறது என்ற தவறான கருத்து உலவுகிறது. இதையும் படிக்க | சாலைப்
பாதுகாப்பு வார விழா: விபத்தைக் குறைப்பதில் ஒரு சம்பிரதாயமா? டீசல்
பயன்பாட்டினால் சமூகம் சந்திக்கும் பிரச்சினைகள் தான் என்ன? இந்த பெட்ரோல்,
டீசல் பயன்படுத்தி வரும் வாகனப் புகையால் உருவாகும் புவிவெப்பமயமாதல்
ஏற்படுத்தும் விளைவுகள் அதிகமாக உள்ளன.
இதனால் புவியின் சராசரி வெப்பம்
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பருவநிலை மாற்றம்
ஏற்படுகிறது. விளைவுகள்: • இயற்கை பேரழிவுகள் (Natural Resources) • உணவு
பாதுகாப்பின்மை (No Food Security) • ஆரோக்கியமின்மை (Health Issues) •
குடிநீர் பற்றாக்குறை (Water Scarcity) • பாலின அடிப்படையிலான வன்முறை
(Sexual Abuse) • அதிகமான் தற்காலிக இடப்பெயர்ச்சி (Large Temporary
transition) • புலம்பெயர்தல்(Migration) மாற்று எரிபொருள் மாறும்போது
செய்யவேண்டியது என்ன? டீசலிலிருந்து மாற்று எரிபொருளுக்கு மாறும்போது
கீழ்க்கண்ட கொள்கைகளை கணக்கில் கொள்ளவேண்டும்.
• பயன்படுத்தப்படும் மாற்று
எரிபொருள் விலை மலிவானதா? (Economically competitive) • ஏற்கனவே உள்ள
பேருந்துகளின் தொழில்நுட்பத்திற்கு பயன்படுத்தப்படும் மாற்று எரிபொருள்
பொருந்தக்கூடியதா? (Technical acceptability for existing vehicles) •
பயன்படுத்தப்படும் மாற்று எரிபொருள் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா ?
(Environmentally acceptability) • பயன்படுத்தப்படும் மாற்று எரிபொருள்
வாகனங்களில் உபயோகிக்க பாதுகாப்பானதா?(user friendly/Safety) •
பயன்படுத்தப்படும் மாற்று எரிபொருள் எல்லா இடங்களிலும் கிடைக்கிறதா?
இதையும் படிக்க | பெண் குழந்தைகளைக் கொண்டாடும் கிராமம் இது! இந்தியாவில்
உள்ள பெட்ரோல், டீசலுக்கு பிறகு வேறு என்ன வகையான மாற்று எரிபொருள் உள்ளது?
• டீசல் (Diesel) • பயோ டீசல் (Bio Diesel) • மின்சாரம் (Electricity) •
அழுத்தப்பட்ட இயற்கை வாயு (CNG) • திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு (LNG) •
ஹைட்ரஜன் (Hydrogen- H2) • ஹைட்ரஜன் பியூஎல் செல்கள் (Hydrogen Fuel Cells)
மாற்று எரிபொருள் மாறுவதினால் சமூகத்திற்கு என்ன பயன்?
• பெட்ரோலிய
எரிபொருட்களை சேமிக்கலாம் ( Conserve Fossil fuels) • மெதுவான காலநிலை
மாற்றம் ஏற்படுவதைக் குறைத்தல் (Slow Climate Change) • தலைகீழ் காலநிலை
மாற்றம் செய்தல் (Reverse Climate Change) • புகையினால் ஏற்படும் மனித
உயிர்கள்/விலங்கினங்கள் /நுண்ணுயிர்களுக்கு பாதிப்புகளிலிருந்து
காப்பாற்றுதல் (Save Human/Animals/Micro organis)
• கடுமையான வானிலை
ஏற்படுவதைத் தடுத்தல் (Reduce Severe Weather Change) • இறக்குமதி
செய்யப்படும் எரிபொருள் சார்புநிலையைக் குறைத்தல் (Minimise Fuel
Dependency) • பொருளாதாரம் & வேலை வளர்ச்சி அடைதல் (Economic and Job
Development) இதனால் கூடிய வரை மத்திய, மாநில அரசுகள், வாகன
தயாரிப்பாளர்கள், மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மாற்று
எரிபொருளுக்கு மாறுவதற்கான நடவடிக்கை எடுத்தால் சமூகத்திற்கு மிகுந்த பயன்
ஏற்படும்.