பொதுவாக காணப்படும் புற்றுநோய்கள்: ஆண்களுக்கு எது?, பெண்களுக்கு எது?

Ennum Ezhuthum
0

 

பொதுவாக காணப்படும் புற்றுநோய்கள்:  ஆண்களுக்கு எது?, பெண்களுக்கு எது?

டந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அந்த எண்ணிக்கை விரைவில் குறையுமா என்ற கேள்விக்கு தற்போது வரை பதில்லை. 2026ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 20 லட்சமாக உயரும் என்று சமீபத்திய வெளியான சில ஆய்வுகளின் தெரிவிக்கின்றன.

டெல்லியில், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஆகியவை மிகவும் பொதுவான வகை புற்றுநோய்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அதன் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, 10 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 27.8 சதவீத பெண் புற்றுநோயாளிகளுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. ஆண்களுக்கு 10.5 சதவீதம் நுரையீரல் புற்றுநோய் இருந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

NCDIR (National Centre for Disease Informatics and Research) உடன் ஐசிஎம்ஆர், இணைந்து 2021ஆம் ஆண்டு வரை டெல்லியில் உள்ள ஏழு மருத்துவமனைகளை ஆய்வு செய்த 10 ஆண்டுகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாராகியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் அறிக்கையை ஆய்வு செய்த போதிலும், இது அனைத்து நிகழ்வுகளின் தரவுகளையும் தொகுக்கிறது. பல்வேறு மருத்துவமனைகளில் பதிவாகியுள்ள நோய்களில், மதிப்பிடப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.


டாக்டர் பிஆர் அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ரோட்டரி புற்றுநோய் மருத்துவமனை, கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் நிறுவனம், மேக்ஸ் புற்றுநோய் மையம், மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி புற்றுநோய் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை மதிப்பீட்டின் கீழ் ஆய்வு செய்யப்பட்ட மருத்துவமனைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆண்கள் மற்றும் பெண்களிடையே வாய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முறையே இரண்டாவது பொதுவான புற்றுநோய்கள் என்பதையும் தரவு காட்டுகிறது. ஆண் புற்றுநோயாளிகளில் 7.5 சதவிகிதம் பேருக்கு வாய்ப் புற்றுநோய் காணப்படுகிறது. 10 சதவிகித பெண் புற்றுநோயாளிகளில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காணப்படுகிறது. இது தவிர, டெல்லியில் ஆண்களில் 41.2 சதவீதமும், பெண்களில் 12.4 சதவீதமும் புற்றுநோய்க்கு புகையிலை பங்களித்துள்ளது.

புற்றுநோய் ஏற்படுவதற்கு, உணவுமுறை தொடங்கி சுற்றுச்சூழல் மாசுப்பாடு என பல்வேறு காரணிகள் உள்ளன. இதனை தடுப்பதற்கு நல்ல சூழலில் ஆரோக்கியமாக வாழ்வதும், புற்றுநோய் தாக்கத்தை குறைக்க உதவும் என கூறப்படுகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)