நிலம் குறித்த ஆவணம் தொடர்பான சொற்கள்

Ennum Ezhuthum
0


நிலம் குறித்த ஆவணம் தொடர்பான சொற்கள்

முகநூலிலும் புலனத்திலும் வந்த இந்தப் பகிர்வின் மூலமாக நில ஆவணம் தொடர்பான பல சொற்களின் பொருளைச் சரியாக அறிந்து கொண்டேன். உங்களுக்கும் இந்தப் பதிவு அப்படி உதவக் கூடும் என்ற நம்பிக்கையில் இங்கே பகிர்கிறேன்.

பட்டா :

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா :

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல் :

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம் :

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம் :

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

தேவதானம் :

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார் :

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம் :

நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து :

பிரிவு.

இலாகா :

துறை.

கிரயம் :

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று :

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண் :

நில அளவை எண்.

இறங்குரிமை :

வாரிசுரிமை.

தாய் பத்திரம் :

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல் :

குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை :

நிலத்தை பயன்படுத்திக் கொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு :

நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி :

வருவாய் தீர்வாயம்.

நன்செய் நிலம் :

அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய் நிலம் :

பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை :

ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது ஆகும்.

*****

 

Post a Comment

0Comments

Post a Comment (0)