
தேவை:
முளைகட்டிய பச்சைபயறு 200 கிராம்
பச்சை மிளகாய் 2 எண்ணம்
வெங்காயம் 1
மிளகுத் தூள் - தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சைப்பயறை
8 மணி நேரம் ஊற வைத்து 8 மணி நேரம் முளைகட்டவும். முளைகட்டிய
பச்சைப்பயறுடன் மிளகாய் , சிறிது வெங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்துக்
கொள்ளவும். இந்த கலவையை ஆம்லெட் போல் தோசைக் கல்லில் வார்க்கவும் . பின்
அதன் மேல் நறுக்கிய வெங்காயம் ,மிளகு தூள் சேர்த்து ஆம்லெட் பதத்தில்
எடுக்கவும்.