உடல் பருமன் பக்க விளைவுகள்: உடல் பருமன் பொதுவாக ஒரு நோயாக கருதப்படுவதில்லை. ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பார்த்தால், அது எந்த நோய்க்கும் குறைவானது இல்லை என்றே தோன்றுகிறது.
உடல் பருமனால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. உடல் பருமனால் 13 வகையான புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உடல் பருமனை தவிர்க்க பலர் அறுவை சிகிச்சை கூட செய்து கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமளிக்கும் உண்மையாகும்.
உடல் பருமனை சரி செய்ய பலர் பல வித முயற்சிகளை செய்கிறார்கள். இதற்காக லட்சக்கணக்கில் செலவழிக்கிறார்கள். எனினும் பல இயற்கையான வழிகளிலும் உடல் பருமனை குறைக்கலாம். உதாரணமாக, ஒரு சில பானங்களை உட்கொண்டு உடல் பருமனை வேகமாக குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? அவற்றை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த மேஜிக் பானங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கிரீன் டீ
கிரீன் டீயில்
கேடசின்கள் காணப்படுகின்றன. இது எடையை குறைக்கும் வேலையை செய்கிறது. இந்த
தனிமம் epigallocatechin gallate என்று அழைக்கப்படுகிறது. அதன் நன்மை
என்னவென்றால், இதனால் வளர்சிதை மாற்றம் சிறப்பாகும். இது உடல் பருமனை
குறைக்க உதவுகிறது. கூடுதல் கலோரிகளை எரிக்கிறது. கிரீன் டீ அருந்துவதால்
முகத்தில் பொலிவு வரும்.
எலுமிச்சை பானம்
எலுமிச்சை பானம் செரிமான அமைப்பை சீர் செய்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், எலுமிச்சை நீர் டிடாக்ஸ் பானமாக கருதப்படுகின்றது, அதாவது இது உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. இது உடலின் கூடுதல் கலோரிகளை எரிக்கிறது. எலுமிச்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பெக்டின் ஃபைபர் உள்ளன. இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றும் வேலையை செய்கிறது. இது விரைவான கொழுப்பு இழப்புக்கு வழிவகுக்கிறது.
ஆரஞ்சு
ஆரஞ்சு சாறு நச்சு நீக்கும் பானமாக கருதப்படுகின்றது. கோடையில் ஆரஞ்சு பழங்கள் சந்தைகளில் கிடைக்கும். ஆரங்கு ஜூஸ் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பணியை செய்கிறது. ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதால் கொழுப்பு வேகமாக குறையும். ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
வெந்தயம்
வெந்தய நீர் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. வெந்தய நீரை தினமும் காலையில் அருந்தலாம். இதற்கு வெந்தயத்தை இரவே ஊற வைக்கவும். காலையில் அந்த விதைகளை எடுத்து அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
மோர்
மோரில் லாக்டிக் அமிலம் பேசிலஸ் உள்ளது. ஆரோக்கியமான பாக்டீரியா செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது குடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். வெயில் காலத்தில் தினமும் மோர் உட்கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.