ஒருநாளைக்கு 138 ரூபாய் சேமித்து இறுதியில் 13.5 லட்சம் பெற முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆனால் எல்.ஐ.சி-யின் பீமா ரத்னா பிளானில் இது சாத்தியம்.
எல்ஐசி பீமா ரத்னா திட்டம் என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் (LIC) வழங்கப்படும் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது கார்ப்பரேட் முகவர்கள், தரகர்கள், இன்சூரன்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (IMF) மற்றும் பொதுவான சேவை மையங்கள் (CSC) மூலம் பெறக்கூடிய, இணைக்கப்படாத தனிப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டம், பல்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. பாலிசி காலத்தில் பாலிசிதாரர் ஒருவேளை இறந்தால், அவர் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கிறது.
பாலிசி
எல்.ஐ.சி பீமா ரத்னா திட்டத்திற்கான பிரீமியத்தை மாதந்தோறும் (NACH மூலம் மட்டும்), காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என எப்படி வேண்டுமானாலும் செலுத்தலாம். செலுத்தப்படாத பிரீமியத்திற்கான முதல் சலுகை காலம் முழு ஆண்டு, அரையாண்டு அல்லது காலாண்டு பிரீமியங்களுக்கு 30 நாட்களும், மாதாந்திர பிரீமியங்களுக்கு 15 நாட்களும் தரப்படும்.
கடன் வசதி
பீமா ரத்னா திட்டத்தில் முதல் பிரீமியம் செலுத்திய நாளிலிருந்து, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்குள் காலாவதியான பாலிசியை முதிர்ச்சிக்கு முன் புதுப்பிக்க முடியும். அதோடு, குறைந்தபட்சம் இரண்டு வருட பிரீமியத்தைச் செலுத்திய பிறகு கடன் பெறலாம். இது நடைமுறையில் உள்ள பாலிசிகளுக்கான சரண்டர் மதிப்பில் 90 சதவீதம் மற்றும் செலுத்தப்பட்ட பாலிசிகளுக்கு சரண்டர் மதிப்பில் 80 சதவீதம் வரை வழங்கப்படும்.
பலன்கள்
எல்ஐசி பீமா ரத்னா திட்டம் பாலிசிதாரர்களுக்கு இறப்பு பலன், உயிர்வாழும் பலன், முதிர்வு நன்மை மற்றும் உத்திரவாதமான சேர்த்தல்கள் போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது. பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் இறந்தால் இறப்புப் பலன் அளிக்கப்படும், அதோடு உத்திரவாதக் கூட்டலுடன் இறப்புக்கான உறுதியளிக்கப்பட்ட தொகையும் பெறலாம். இது வருடாந்திர பிரீமியத்தின் ஏழு மடங்கு அல்லது அடிப்படைக் காப்பீட்டுத் தொகையின் 125 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்.
13.5 லட்சம் பெறுவது எப்படி சாத்தியம்?
இந்தப் பாலிசியில், அடிப்படைத் தொகையானது குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாக இருக்க வேண்டும். அதிகபட்சத் தொகைக்கு வரம்பு இல்லை. பாலிசி கால அளவு 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
30 வயதான ஒருவர் அடிப்படைத் தொகையுடன் எல்ஐசி பீமா ரத்னா திட்டத்தை தேர்ந்தெடுத்தால் 20 வருட பாலிசி காலத்திற்கு 10 லட்சமாக இருக்கும். அவர் தனது பிரீமியங்களை ஆண்டுதோறும் செலுத்தும் முறையை தேர்வு செய்தால், அடுத்த 16 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 50,000 செலுத்த வேண்டும். அப்படி என்றால் நாளொன்றுக்கு 138 ரூபாய் வருமானத்தில் ஒதுக்க வேண்டும். 20 ஆண்டுகள் முடிவில் அவருக்கு ரூ.10 லட்சம் பணம் மற்றும் கூடுதல் வருவாய் ரூ.3 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு ரூ.13.5 வரை கிடைக்கும்.