குறட்டை சத்தத்தினால், பலரும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில்
இருக்கும்போது தங்களை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகின்றது. இதனால்,
குறட்டை விடுபவர்களுக்கு அருகில் படுத்திருப்பவர்கள், அதிர வைக்கும்
ஒலியினால், பல நாட்கள் தங்களது தூக்கத்தை தொலைத்துவிட்டு தவிக்கின்றனர்.
இதன்
காரணமாகவே, குறட்டை சத்தம் பல வீடுகளில் சண்டையை ஏற்படுத்தி கணவன்
மனைவிக்குள்ளே பிரிவையும் ஏற்படுத்திவிடுகிறது. வெளிநாடுகளில் குறட்டை
சத்தத்தினால் அவதிப்படும் கணவனோ அல்லது மனைவியோ தங்களது துணையிடமிருந்து
விவாகரத்து பெற்றுக் கொள்ள கூட சட்டமே அனுமதிக்கிறது.
அந்தளவிற்கு
குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் குறட்டை எதனால் ஏற்படுகிறது
என்றால், மூச்சுக் குழலில் ஏற்படும் அடைபினால், தூங்கும்போது சுவாசப்பாதை
அடைப்பட்டு, மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதுவே, குறட்டை சத்தமாக
வெளிவருகிறது. மேலும், மூக்கின் பின்புறம் இருக்கும் அடினாய்ட் தசையும்,
தொண்டைக்குள் இருக்கும் டான்சிலும் பல்வேறு காரணங்களால் விரிவடையும்போது,
நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய்விடுகிறது.
பின்னர்,
அது வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படுகிறது. அந்த நெருக்கடியால் அழுத்தம்
கொடுத்து மூச்சை இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை
ஏற்படுத்துகிறது. அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவருகிறது. இதனால்தான்,
குறட்டை ஒரு வியாதி என்றே மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றது.இந்த குறட்டை
சத்தத்தை நிறுத்துவதற்கு கை வைத்தியத்தில் மிக எளிமையான வழிமுறைகள் உள்ளன.
அவற்றை பயன்படுத்தி, குறட்டைக்கு குட்பை சொல்லி விடலாம் எளிதில்.
இதோ அதற்கான எளிய வழி:
தேவையானவைமுள் முருங்கை இலை - 2
வெள்ளை மிளகு - 7
அதிமதுரத் தூள் - ஒரு சிட்டிகை
பூண்டு - 4 பற்கள்
சின்ன வெங்காயம் - 2
பனைவெல்லம் - தேவைக்கேற்ப.
செய்முறை: முள் முருங்கை, வெள்ளை மிளகு, அதிமதுரத்தூள், பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், பொடித்த பனை வெல்லம் எல்லாவற்றையும் சேர்த்து மைய அரைத்து விழுதாக்கி நெல்லிக்காய் அளவு இரவில் சாப்பிட்டு வர விரைவில் மூச்சுக் குழல் அடைப்பு சரியாகி, குறட்டை சத்தம் நிற்கும்.