காளானை ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க.. சிக்கன் கிரேவி தோத்துரும்!

Ennum Ezhuthum
0

 

காளானை ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க.. சிக்கன் கிரேவி தோத்துரும்!
சிக்கனை பிடிக்காத அசைவ விரும்பிகள் இருக்க முடியாது.. அதே போல காளான் பிடிக்காத அசைவ விரும்பிகளும் இருக்க முடியாது.
ஏனென்றால், அசைவத்திற்கு ஏற்ற புரத சத்துக்களை கொண்டுள்ளது காளான்.

இட்லி, தோசை, சப்பாத்தி, வெள்ளை சாதம் என அனைத்து விதமாக உணவுக்கும் தோதாக இருக்கும் சுவையான காளான் மசாலா கிரேவியை, மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

காளான் - 250 கிராம்.
இலவங்கப்பட்டை - 1.
ஏலக்காய் - 3.
சீரகம் - 1/2 ஸ்பூன்.
வெங்காயம் - 1.
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்.
கொத்தமல்லி பொடி - 1/2 ஸ்பூன்.
சீரக பொடி - 1/2 ஸ்பூன்.
இஞ்சி - பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்.
பச்சை மிளகாய் - 2.
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
தக்காளி - 1.
கொத்தமல்லி தழை - 1 கொத்து.
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
உப்பு, சமையல் எண்ணெய் - தேவையான அளவு.




செய்முறை :

கிரேவி செய்வதற்கு முன்னதாக எடுத்து வைத்துள்ள, காளானை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தொடர்ந்து வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

தற்போது, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் சீரகம், இலவங்கப்பட்டை, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இதில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், சீரக தூள், கரம் மசாலா, கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.



இந்த மசாலா பொருட்கள் அனைத்தும் நன்கு வதங்கியதும், இதில் நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்தது நன்கு வதக்க வேண்டும்.

தக்காளி நன்கு வதங்கி, எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் இதில், நறுக்கி வைத்துள்ள காளான் துண்டுகளை சேர்த்துக்கொள்ளவும். மீண்டும் இதில் அரை கப் தண்ணீர் சேர்த்து கிளறி, பாத்திரத்தை மூடி ஒரு 10 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.

10 நிமிடத்திற்கு பின்னர், பாத்திரத்தை திறந்து ஒரு கிளறு கிளறிவிடவும். பின்னர், கொத்தமல்லி தழைகளை பொடியாக நறுக்கி இதன் மீது தூவி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான காளான் கிரேவி ரெடி. இது இட்லி, தோசை, வெள்ளை சாதம், சப்பாத்தி என அனைத்திற்கு அட்டகாசமாக இருக்கும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)