பருப்பு உருண்டை பிரியாணி

Ennum Ezhuthum
1 minute read
0
ads banner

 

பருப்பு உருண்டை பிரியாணி

உருண்டை செய்வதற்கு தேவையானவை:

கடலைப்பருப்பு, துவரம் பருப்பு - தலா அரைகப்,

உப்பு - தேவைக்கு,
பச்சைமிளகாய் - 2,
சோம்பு - ½ டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் நீர்விட்டு 1 மணி நேரம் ஊறவைத்து, ஊறியதும் நீர் வடிகட்டி உப்பு, சோம்பு, தேங்காய் துருவல், பச்சைமிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி அரைத்ததை உருண்டைகளாக உருட்டி 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.பருப்பு உருண்டை தயார்.

பிரியாணி செய்வதற்கு தேவையானவை:

பாசுமதி அரிசி - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய்தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் -1,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
அரைப்பதற்கு: தேங்காய்துருவல்- ½ கப்,
புதினா, மல்லி - தலா ½ கப்,
பிரியாணி இலை - 1,
கசகசா - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
தக்காளி - 1.

செய்முறை:

அரைப்பதற்கு கொடுத்தவற்றை அரைத்து தனியே வைக்கவும. குக்கரில் நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, தயிர், உப்பு சேர்த்து அரைத்த விழுது சேர்த்து வதக்கி 2 கப் நீர் விட்டு பாசுமதி அரிசி கழுவிச் சேர்த்து நன்றாகக் கலக்கி மூடி போட்டு மூடி வெயிட் போட்டு 1 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி வெளியேறியதும் வெந்த உருண்டைகள் சேர்த்து நன்றாக கலந்து விடவும். குக்கரை மீண்டும் வெயிட் போட்டு மூடி வைக்கவும். அடுப்பில் வைக்க வேண்டாம்.

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 4, April 2025