2 வருடத்திற்குப் பிறகு தொடங்கும் இலவச சிங்கப்பூர் சுற்றுலா.. எப்படி அப்ளை செய்வது..?

Ennum Ezhuthum
0

 

2 வருடத்திற்குப் பிறகு  தொடங்கும் இலவச சிங்கப்பூர் சுற்றுலா.. எப்படி அப்ளை செய்வது..?
சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையம் அதன் பயணிகள் போக்குவரத்தில் சுமார் 30% இருக்கும் இடைநிறுத்த(transit traveler) பயணிகளுக்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு, மீண்டும் இலவச நகர சுற்றுப்பயணத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
அறிக்கைகள்படி உலகில் உள்ள பிஸியான விமான நிலையங்களில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் ஒன்றாகும். நாடு விட்டு நாடு செல்லும் போது நீண்ட தூர ஒற்றை விமானம் கிடைக்காது. அதுபோன்ற நேரத்தில் இடையில் வேறொரு நாட்டில் இறங்கி மாற வேண்டி இருக்கும். அப்படி இடை நின்று செல்லும் பயணிகள் இடைநிறுத்த (transit traveler) பயணிகள் என்று அழைக்கப்படுவர்.

இவர்கள் சில மணி நேரங்கள்தான் அந்த நாட்டில் இருப்பர். அந்த நேரத்தில் விமான நிலையத்திற்குள் இருப்பதற்கு பதிலாக கிடைக்கும் நேரத்தில் அந்த நாட்டிலும் ஒரு சுற்றுலா அடித்தால் நன்றாக இருக்கும் அல்லவே? அதை தான் சிங்கப்பூர் விமான நிலையம் செய்ய முயல்கிறது.

இது இன்றைய முயற்சி என்று தப்பாக நினைத்துவிட வேண்டாம். 1987 ஆம் ஆண்டு முதன்முதலில் விமான நிலையத்தை ஒரு இடமாற்ற மையமாக(transfer hub) மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கவும், சிங்கப்பூருக்கு விடுமுறை சுற்றுலாக்களுக்காக மக்களை வர வைக்க தூண்டவும், இலவச நகர சுற்றுப்பயணத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கோவிட்-19 காரணமாக இரண்டு வருட காலத்திற்கு இந்த இலவச நகர சுற்றுலா நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், சாங்கி விமான நிலையக் குழு (CAG), சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) ஆகியவை சமீபத்தில் நீண்டும் இந்த இலவச சுற்றுலாவை மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்த இலவச சுற்றுலா திட்டத்தில், நகர இடங்களின் டூர், ஜூவல் டூர் மற்றும் ஹெரிடேஜ் டூர் போன்ற சுற்றுப்பயணங்கள் ஏற்கனவே வழக்கத்தில் இருந்தன. அதோடு தற்போது புதிய ஆர்வத்தை உள்ளடக்கும் வகையில், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கிழக்குப் பிராந்தியத்தின் புதிரான காட்சிகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லும் பயண திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு இலவச சுற்றுப்பயணமும் சுமார் 2.5 மணிநேரம் நீடிக்கும், மேலும் இந்த பயணத் திட்டம் தினமும் செயலில் இருக்கும். தினமும் அடுத்த விமானத்திற்கு காத்திருக்கும் பயணிகள் இந்த வாய்ப்பை கண்டிப்பாக அனுபவித்துக்கொள்ளலாம். உங்கள் விமான நேரத்தை பொறுத்து திட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும்.



பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், சாங்கி விமான நிலையத்தின் இணையதளத்தில் முன்பதிவு வசதி இப்போது கிடைக்கிறது. குறைந்தபட்சம் 5.5 மணிநேரம், அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இடமாற்றம்செய்வதற்காக காத்திருக்கும் பயணிகள் அனைவரும் இலவச சிங்கப்பூர் பயணத்தில் சேர முடியும். சிங்கப்பூர் சுற்றுப்பயணங்களில் பங்கேற்க, பயணிகள் செல்லுபடியாகும் நுழைவு விசாவைப் பெற்றிருந்தால் போதுமானது




பயணத் திட்டம் சில இடங்கள் பயணிகளுக்கு சிங்கப்பூரின் சுற்றுசூழல் நிலைத்தன்மை முயற்சிகள் பற்றிய கண்ணோட்டத்தை வழங்கும். இதில் 'அவர் டேம்பைன்ஸ் ஹப்'(Our Tampines Hub) கூரையில் உள்ள சுற்றுச்சூழல் சமூக பூங்கா, சிட்டி சைட்ஸ் டூரின் ஒரு பகுதியாக இருக்கும் கார்டன்ஸ் பை தி பே (Gardens by the Bay) மற்றும் ஜூவல் டூரின் ஒரு பகுதியாக இருக்கும் ஜுவல் (Jewel) செயல்படுத்தப்படும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை முயற்சிகள் ஆகியவை அடங்கும்.



வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த சிஏஜியின் ஏர் ஹப் மற்றும் கார்கோ டெவலப்மென்ட்டின் செயல் துணைத் தலைவர் லிம் சிங் கியாட், பயணத்தை மீண்டும் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், மேலும் விமான நிலையத்தில் மேலும் பல புதிய இடங்களை ஆராய பயணிகளை ஈர்க்கும் என்றும் கூறினார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)