சீன எச்சரிக்கையைக் கண்டுகொள்ளாத தைவான்... சீனாவின் போர் ஒத்திகையால் எல்லையில் உச்சகட்ட பதற்றம்!

Ennum Ezhuthum
0

 

சீன எச்சரிக்கையைக் கண்டுகொள்ளாத தைவான்... சீனாவின் போர் ஒத்திகையால் எல்லையில் உச்சகட்ட பதற்றம்!

ரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவிடமிருந்து தனி நாடாகப் பிரிந்த தைவானை, மீண்டும் தனது ஆளுகைக்குள் கொண்டு வர சீனா முயன்றுவருகிறது.

இதற்கிடையே தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துவருகிறது.

தைவான் Vs சீனா

இந்த நிலையில் சீனாவின் எதிர்ப்பைப் புறந்தள்ளி, தைவானுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி உள்ளிட்ட தலைவர்கள் சென்று வந்ததும், அதைத் தொடர்ந்து, சீனா தைவானைச் சுற்றிப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதும், உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில்தான் தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியானது. உடனே சீனா ``தைவான் அதிபர் அமெரிக்காவுக்குச் சென்றால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும்" என்று அச்சுறுத்தியது. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை தைவான் அதிபர் சாய் இங்-வென் சந்தித்தார்.

சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி - தைவான் அதிபர் சாய் இங்-வென்

இந்தச் சந்திப்பு நிகழ்ந்த மறுநாளே தைவானைச் சுற்றி மூன்று நாள்கள் ராணுவப் பயிற்சிகளை சீனா நடத்தும் என்று அறிவித்திருக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் குறிப்பில், "தைவான் ஜலசந்தி, தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கில் திட்டமிட்டபடி போர் தயார்நிலை ரோந்துகள் மற்றும் பயிற்சிகளை சீனா நடத்தும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இது குறித்து தைவானிடமிருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரு நாடுகளிடையே கடும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.


Post a Comment

0Comments

Post a Comment (0)