கோடையில் தினமும் கற்றாழை ஜூஸை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Ennum Ezhuthum
0

 

கோடையில் தினமும் கற்றாழை ஜூஸை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிகப்படியான வெயிலின் தாக்கத்தால் உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.

குறிப்பாக பெரும்பாலானோர் கோடையில் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைகள் என்றால், அது உடல் சூடு, உடல் வறட்சி போன்றவை தான். இது தவிர கடுமையான தலைவலி, மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்

வெயிலின் தாக்கத்தைத் தணிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஜூஸ்களை அதிகமாக குடிப்போம். அதில் கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளைத் தடுக்கும் சக்தி கொண்ட மிகச்சிறந்த ஜூஸ் தான் கற்றாழை ஜூஸ்.

அதுவும் இந்த கற்றாழை ஜூஸை கோடைக்காலத்தில் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இப்போது கற்றாழை ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

மலச்சிக்கல் நீங்கும்

கற்றாழை ஜூஸில் உள்ள பல்வேறு மருத்துவ குணங்கள் கோடைக்காலத்தில் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவுகிறது. மேலும் கற்றாழை ஜூஸானது செரிமான பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு ஒரு அருமருந்து.

தலைவலி

கோடையில் கொளுத்தும் வெயிலால் நிறைய பேர் தலைவலியால் அவதிப்படுபவர்கள். இம்மாதிரியான சூழ்நிலையில் கற்றாழை ஜூஸ் நல்ல பலனை அளிக்கும். அதுவும் கோடைக்காலத்தில் தினமும் கற்றாழை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அனைத்து வகையான தலைவலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

நச்சுக்களை திறம்பட வெளியேற்றும்

கற்றாழை ஜூஸ் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை திறம்பட வெளியேற்றும். உடலில் நச்சுக்கள் அதிகம் இருந்தால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை எளிதில் வரவழைத்துவிடும். எனவே கற்றாழை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றி, உடலையும், சருமத்தையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

நெஞ்செரிச்சல் தடுக்கப்படும்

கோடைக்காலத்தில் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுவதுண்டு. ஆனால் கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், அது எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் இப்பிரச்சனையில் இருந்து எளிதில் விடுவிக்கும்.

இரத்த சோகை தடுக்கப்படும்

உடலில் போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாத போது பலர் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையில், தினமும் கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதுவும் கற்றாழை ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுவதோடு, இரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கிறது.

பசியின்மையைத் தடுக்கும்

கோடைக்காலத்தில் நிறைய பேருக்கு சாப்பிடவே பிடிக்காது. சொல்லப்போனால் பசி எடுக்காது. இப்படி சரியாக சாப்பிடாமல் இருந்தால், அது உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்திவிடும். இதைத் தடுக்க சிறந்த வழி கற்றாழை ஜூஸை குடிப்பது தான்.

முக்கியமாக கற்றாழை ஜூஸை கோடைக்காலத்தில் குடித்து வந்தால், உடல் நீரேற்றத்துடன் இருப்பதோடு, உடல் அதிகமாக சூடு பிடிக்காமலும் இருக்கும். எனவே கோடையில் கற்றாழை ஜூஸை குடித்து, உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Post a Comment

0Comments

Post a Comment (0)