ரோட்டு கடை சுவையில் அப்படியே 'கார சட்னி' செய்ய ரெசிபி இதோ..

Ennum Ezhuthum
0

 

ரோட்டு கடை சுவையில் அப்படியே 'கார சட்னி' செய்ய ரெசிபி இதோ..
ம் வீடுகளில் இருக்கும் கெட்ட பழக்கம் பார்த்து பார்த்து பக்குவமாய் எந்த உணவை சமைத்தாலும் அதில் ஹோட்டல் டேஸ்ட் வரவில்லையே என வருத்தப்படுவது.
ஆனால் ஹோட்டலில் போய் வீட்டு உணவை தேடுவார்கள். இது உணவு பிரியர்கள் பலரும் சொல்லும் விஷயம் தான். ஹோட்டலில் சாப்பிடலாம் என்ற முடிவு எடுத்த பின்பு வீட்டு சாப்பாடு போல் எங்கே கிடைக்கும் என தேடுவார்கள். இதுவே வீட்டில் சமைத்த உணவில் ஏன் ஹோட்டல் டேஸ்ட் வரவில்லை என்பார்கள். இப்படி உணவு குறித்த பல விவாதங்கள் இயல்பாகவே தமிழ் குடும்பங்களில் நடக்கும் ஒன்று தான்.

அதில் முக்கியமாக இந்த ரோட்டு கடை கார சட்னி ஆண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பல ஆண்கள் இந்த சட்னியை மனைவியிடமும் அம்மாவிடம் செய்து தரும்படி கேட்பார்கள். அதற்கு காரணம், அந்த சட்னியில் இருக்கும் டேஸ்ட் தான். அப்படி உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களும் இந்த சட்னியை கேட்டார்கள் என்றால் ரொம்ப யோசிக்க வேண்டாம் உடனே எஸ் சொல்லிவிட்டு செய்து கொடுங்கள். அதை எப்படி செய்வது என்ற ரகசியத்தை குக் வித் கோமாளி கனி தன்னுடைய சமையல் வீடியோவில் செய்து காட்டி உள்ளார் வாங்க பார்க்கலாம்.



தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, புளி, காய்ந்த மிளகாய், பூண்டு.

செய்முறை:


1. முதலில் காய்ந்த மிளகாய், பூண்டு, புளி சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

2. பின்பு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து பேஸ்ட் போல் மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

3. அடுத்தது தேவையான அளவு தக்காளியை தனியாக அரைத்து கொள்ள வேண்டும்.

உங்கள் தோற்றத்தை அழகாக காட்ட நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய ஸ்டைலிங் டிப்ஸ்..!

4. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் வெங்காய கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

5. பின்பு கடைசியாக தக்காளி கரைசல் சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் ஈஸியான ரோட்டுக்கடை கார சட்னி தயார்.


Post a Comment

0Comments

Post a Comment (0)