பாரம்பரிய முறைப்படி தமிழ் புத்தாண்டு எப்படி கொண்டாட வேண்டும்..?

Ennum Ezhuthum
0

 

Puthandu 2023: பாரம்பரிய முறைப்படி தமிழ் புத்தாண்டு எப்படி கொண்டாட வேண்டும்..?

 சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்காட்டியின் தொடக்கத்தை குறிக்கும் தமிழ் புத்தாண்டு நம் தமிழக மக்களால் கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.



தமிழ் புத்தாண்டைக் கொண்டாடவும், இந்நாள் உறுதியளிக்கும் புதிய தொடக்கங்களைக் கொண்டாடவும் நாம் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. அந்த வகையில் தமிழ் புத்தாண்டை கொண்டாடக்கூடிய வழிகளை இங்கே பார்க்கலாம்



தமிழ் புத்தாண்டுக்கு முன் வீட்டை சுத்தம் செய்வது பண்டிகையை சிறப்பாக்க உதவும். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக உங்கள் வீட்டை நேர்த்தியாக சுத்தம் செய்து பண்டிகையை தொடங்குங்கள். வீடு வாசலில் அரிசி மாவு கோலம் போடுவதில் துவங்கி , வாசலை மா இலைகளால் அலங்கரியுங்கள். புத்தாண்டுக்கு முன்தினமே வீட்டை சுத்தம் செய்து அலங்கரித்து விட்டால் அடுத்தநாள் வழிபட தேவையான வேலைகளை ரிலாக்ஸாக செய்யலாம்.



தமிழ் புத்தாண்டின் சிறப்பே நமது பாரம்பரிய முறைப்படி துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு என அறுசுவை அடங்கிய உணவுகளை தயாரிப்பதே. ஆறு வெவ்வேறு சுவைகளில் தயாரிக்க வேண்டிய உணவுகளை முன்பே சேகரித்து வைத்து கொள்ளுங்கள். இதில் துவர்ப்புக்கு வெற்றிலை பாக்கு சேர்க்கலாம். உணவுக்கு பிறகு துவர்ப்பான வெற்றிலை பாக்கு போடுவது ஜீரணத்திற்கும் நல்லது. வழக்கமான பண்டிகை உணவுகளான வடை, பாயசத்தோடு மாங்காய் பச்சடி அவசியம். முக்கனிகளான மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழங்களை புத்தாண்டு உணவுகளில் சேர்த்து கொள்ளுங்கள்.



முன்பே கூறியப்படி உங்கள் வீட்டின் நுழைவாயிலை கோலங்களால் அலங்கரிக்கவும். உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலை சுற்றி கோலங்களை வரியா அரிசி மாவு பயன்படுத்துங்கள். கோலத்தின் மையத்தில் ஒரு பெரிய குத்து விளக்கு விளக்கு வைக்கவும். கண்கவர் வண்ண கோலங்கள் போடுவது வீட்டை மேலும் அழகாக்கும்.



குளியல் புதிய ஆண்டில் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எனவே புத்தாண்டன்று சீயக்காய் அல்லது ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். சிலர் இந்த நாளில் மூலிகை குளியல் எடுப்பார்கள். பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள்.



பலர் தமிழ் புத்தாண்டிற்கு புதிய ஆடைகளை எடுப்பதில்லை. எனினும் புதிய ஆடைகளாக நம் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை எடுத்து கட்டுவது கொண்டாட்டத்தை களைகட்ட செய்யும். எனவே புத்தாண்டுக்கு சில நாட்களுக்கு முன்பே புதிய ஆடை அல்லது பாரம்பரிய ஆடைகளை வாங்கி பண்டிகை அன்று அணிந்து சிறப்பாக கொண்டாடுங்கள்.



தமிழ் புத்தாண்டின் முக்கிய அம்சம் குடும்பத்துடன் தெய்வீக வழிபாடு செய்வது. உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கும் சாமி படங்கள் மற்றும் சிலைகளை சுத்தம் செய்து பூக்கள் வைத்து மாலை போட்டு வழிபாட்டிற்கு தாயர் செய்யவும். பின் தெய்வங்களுக்கு முன் வாழைஇலை போட்டு பழங்கள், இனிப்புகள் மற்றும் வீட்டில் சமைக்கப்பட்ட அறுசுவை பதார்த்தங்கள் என வைத்து பிரசாதமாக படைக்கவும். பின் சூடம் காட்டி ஆரத்தி எடுத்து, சாம்பிராணி காட்டி, பித்தளை மணி அடித்து மந்திரங்கள் சொல்லி வழிபடுங்கள்.



வீட்டில் புத்தாண்டு வழிப்பாட்டை சிறப்பாக முடித்த பின் நண்பர்களை, உறவினர்களை சந்தித்து வாழ்த்து கூறுங்கள். இனிப்புகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறகு உள்ளூர் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து உங்கள் புத்தாண்டு செழிப்புடன் இருப்பதை உறுதி செய்யுங்கள். கோவிலுக்கு சென்று தேங்காய் உடைப்பது தடைகள் மற்றும் சவால்கள் இல்லாமல் புத்தாண்டை கடக்க செய்யும் பிரார்த்தனையை குறிக்கிறது.



வீட்டில் இருக்கும் பெரியவர் ஒருவரை மத்தியில் அமர வைத்து அவரை சுற்றி உட்கார்ந்து கொண்டு அவரை பஞ்சாங்கம் படிக்க செய்யுங்கள். பஞ்சாங்கம் என்பது இந்து நாட்காட்டி, இது வரவிருக்கும் ஆண்டிற்கான முக்கியமான தேதிகள் மற்றும் கணக்கீடுகளை வழங்குகிறது.



புத்தாண்டு விருந்து என்பது சைவ உணவுகளை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உங்கள் தமிழ் புத்தாண்டு விருந்தில் மாங்காய் பச்சடியை தவிர ஸ்வீட் தால் போலி, வேப்பம்பூ ரசம் உள்ளிட்டவற்றை முக்கியமாக சேர்க்கலாம். இந்த விருந்தில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை பங்கேற்க செய்யுங்கள்.

Post a Comment

0Comments

Post a Comment (0)