வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கும் சன் ஸ்கிரீன் அவசியமா?

Ennum Ezhuthum
0

 

Doctor Vikatan: வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கும் சன் ஸ்கிரீன் அவசியமா?

குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் தேவையா? வெளியே செல்லும் குழந்தைகளுக்கு ஒரே நாளில் சருமம் கருத்துவிடுகிறதே...

 

என்ன செய்வது? குழந்தைகளுக்குப் பயன்படுத்தவென பிரத்யேக சன்ஸ்கிரீன் உள்ளதா.... எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?


பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதங்களில் இருந்தே சன் ஸ்கிரீன் உபயோகிக்கத் தொடங்கலாம்.

 

 அதற்கு முன்புவரை வேண்டியதில்லை. 4-5 வயதுக்குப் பிறகுதான் பிள்ளைகள் வெளியே விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களை வெயிலில் விடாமல் தடுப்பதுதான் சவாலே.

சன் ஸ்கிரீன் போட்டுவிட்டு குழந்தைகளை வெளியே வெயிலில் விளையாட விடுவது சரியா என்றால், அதைத் தவிர்ப்பதே சிறந்தது. குறிப்பாக வெயில் உச்சத்தில் இருக்கும்போது குழந்தைகளை வெளியே விட வேண்டாம்.


சன் ஸ்கிரீன் போட்டுவிடுவதால் குழந்தைக்குப் பாதுகாப்பு என நினைப்பதைவிட, அந்த வெயிலைத் தவிர்க்கச் செய்வதே சிறந்தது. குழந்தைகளுக்கென பிரத்யேக சன் ஸ்கிரீன் எல்லாம் கிடையாது. குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு என எல்லோருக்கும் ஒன்றுதான். நல்ல சன் ஸ்கிரீன் என்றால் அதில் 30 முதல் 50 வரை எஸ்.பி.எஃப் (சன் புரொட்டெக்ஷன் ஃபேக்டர்) இருக்க வேண்டும். யுவிஏ மற்றும் யுவிபி கதிர்கள் தாக்காமல் பாதுகாக்கும்படியாக இருக்க வேண்டும்.

 

சன்ஸ்கிரீன்

நான்காமிடோஜெனிக் (Noncomedogenic) தன்மை கொண்டதா என பார்த்து வாங்க வேண்டும். அதாவது நம் சரும துவாரங்களை அடைக்காமல், பருக்களை ஏற்படுத்தாதபடி இருக்க வேண்டும். வியர்வை மற்றும் தண்ணீர் ரெசிஸ்டன்ட்டாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)