மேதைகளின் நகைச்சுவை- (இரண்டு முகம்)

Ennum Ezhuthum
0 minute read
0
ads banner

 அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரஹாம் லிங்கனின் முகம் வடுக்களுடனும் சிடுசிடுப்பாக இருப்பது போலும் இருக்கும்.ஆனால் அவரிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் இருந்தது.ஒரு நாள் பொது விவாதம் ஒன்றில் லிங்கன் கலந்து கொண்டார்.அப்போது அவருக்கு எதிராகப் பேசிய ஒரு அரசியல்வாதி அவருக்கே  உரித்தான பாணியில்,''லிங்கன் இரட்டை முகம் கொண்டவர். 

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி முகத்தை மாற்றி வைத்துப் பேசுவார்,''என்று பேசினார்.அவர் சொல்ல வந்தது,லிங்கன் தனது  கொள்கையில் ஒரே மாதிரி கருத்துடன் இருப்பதில்லை என்பதே.

ஆனாலும் லிங்கன் பேசும்போது,''எதிர்க் கட்சி நண்பரின் இந்தக் கூற்றை பார்வையாளர்களான உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.எனக்கு மட்டும் இரண்டு முகங்கள் இருந்தால்,இந்த அசிங்கமான முகத்தை ஏன் நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்?மாற்றிக் கொண்டிருக்க மாட்டேனா?''என்றதும் எதிர்க் கட்சிக்காரரின் முகத்தில் ஈ ஆடவில்லை...

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 29, March 2025