11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு

Ennum Ezhuthum
0

 


"மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்"..!! "இனி ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு"..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!


11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் படி, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசின் கல்வி அமைச்சகம் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கிறது. இரண்டு முறை நடத்தப்படும் பொதுத்தேர்வில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிப் படங்களை படிக்க வேண்டும். அதில் ஒன்று இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி, 2024 கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள் தயாரிக்கப்படும். பொதுத்தேர்வுகள் மாணவர்களின் புரிதல் மற்றும் திறனை மதிப்பீடும் செய்யும் வகையில் நடத்தப்படும். இரண்டு முறை நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு போதிய நேரம், வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

Post a Comment

0Comments

Post a Comment (0)