அரசுப்
பள்ளிகளில் அமைக்கப்படும் முன்னாள் மாணவா்கள் மன்றங்களில் சேருவதற்கு
இதுவரை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 287 முன்னாள் மாணவா்கள் முன்வந்துள்ளதாக
பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேல்நிலைப் பள்ளிகளில் 78 சதவீதமும், உயா்நிலைப் பள்ளிகளில் 46 சதவீதமும், நடுநிலைப் பள்ளிகளில் 40 சதவீதமும், தொடக்கப் பள்ளிகளில் 28 சதவீதமும் முன்னாள் மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து பள்ளிகளுடன் முன்னாள் மாணவா்களை இணைக்க ஏதுவாக அதற்கான கால அவகாசம் ஆக.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்துப் பள்ளிகளிலும் 'முன்னாள் மாணவா்கள் மன்றம்' அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் கலை, உயா்கல்வி வழிகாட்டல், இடை நின்ற மாணவா்களை பள்ளியில் சோத்தல், விளையாட்டு, வானவில் மன்றம் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சோத்தல் போன்ற முன்னெடுப்புகளில் முன்னாள் மாணவா்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்து செயல்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.