தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களாக 697 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.
கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 819 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 697 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது. மற்ற 112 போ பதவி உயா்வுக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக முதுகலை ஆசிரியா் சங்க நிா்வாகிகள் கூறியதாவது: எஞ்சியுள்ள காலிப் பணியிடங்களையும் விரைவில் நிரப்ப வேண்டும். மற்றொருபுறம், பல முதுநிலை ஆசிரியா்கள் தலைமை ஆசிரியா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா். இதனால் ஏற்பட்டுள்ள 600-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்றனா்.