சமீபத்தில்
செயற்கை நுண்ணறிவியல் (AI) மூலம் டிவியில் செய்தி வாசிப்பாளர் வலம் வந்தது
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தாலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த வைப் மறைவதற்குள் இந்தியாவின் முதல் AI பள்ளி ஒன்று கேரளாவின்
தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது
தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு உதாரணமாக உள்ள நிலையில் இதன் அம்சங்கள்
மற்றும் இதனால் ஆசிரியர்கள் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பது
குறித்து விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி:
மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு மற்றும்
மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்தும் நோக்கத்தில்
தொடங்கப்பட்டுள்ளது தான் இந்த ஏஐ பள்ளி. இந்தியாவின் முதல் செயற்கை
நுண்ணறிவு பள்ளியாக தற்போது பிரபலமாகியுள்ளது கேரளா மாநிலம்
திருவனந்தப்புரத்தில் உள்ள சாந்திகிரி வித்யாபவன் பள்ளி. இந்த தொழில்நுட்ப
வசதியின் மூலம் பாடத்திட்ட வடிவமைப்பு, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல்,
மதிப்பீடு மற்றும் மாணவர் தரவு பகுப்பாய்வு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த
AI-யில் இடம் பெற்றுள்ளது.
மாத்ருபூமி
அறிக்கையின்படி, AI பள்ளியானது iLearning Engines (ILE) USA மற்றும் Vedhik
eSchool ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கின்றனர். மேலும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இந்த புதிய
கற்றல் முறை, நல்ல கல்வியை வழங்கப் போகிறது என்று வேதிக் இஸ்கூல்
கூறுகிறது.
செயற்கை நுண்ணறிவு பள்ளியின் அம்சங்கள்:
இந்த AI பள்ளியானது தற்போது 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள
மாணவர்களுக்கானதாக இருக்கும். இதன் மூலம் மாணவர்கள் பாடங்களை விரிவாக
கற்றுக்கொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக கல்வி அறிவைத் தாண்டி
தனிப்பட்ட ஒருவரின் திறனைக் கண்டுபிடித்து அதை வளர்ப்பதற்கு ஏதுவாக இந்த
ஏஐ பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர் கண்டுபிடிப்பாளர்கள்.
இதோடு பாடத்திட்டங்கள் மட்டுமில்லாது புகழ்பெற்ற வெளிநாட்டு
பல்கலைக்கழங்களில் உயர் கல்வி படிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும்
JEE, NEET, CUET, CLAT, GMAT மற்றும் IELTS உள்ளிட்ட போட்டித்
தேர்வுகளுக்கும் மாணவர்களைத் தயார் படுத்துகிறது.
தொழில்நுட்பங்கள் என்றாலே பல ரூபாய் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணம்
தோன்றும். ஆனால் இந்த AI பள்ளி ஆடம்பரமான தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தினாலும் இதற்கு அதிக செலவுகள் இல்லையாம். நம்முடைய செயற்கை
நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆன்லைன் ஆதாரங்கள் பள்ளியின்
இணையத்தில் இருப்பதால், அதிக பணம் செலவழிக்காமல் இவற்றை நாம் எளிமையாக
பயன்படுத்த முடியும்.
ChatGPT போன்ற மேம்பட்ட AI
அமைப்புகள் வகுப்பறைகளில் ஆசிரியர்களை மாற்ற முடியுமா? என்ற கேள்வி
அதிகளவில் எழுந்து வருகிறது. எந்த சூழலிலும், AI பள்ளி தொழில்நுட்பம்
சார்ந்த கல்வியை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருந்தாலும்,
பாரம்பரிய கற்பித்தல் முறைகள் என்பது இன்றியமையாதவை. ஆசிரியர்கள் புகட்டும்
மனித தன்மைமிக்க பாடங்களை ஒரு கருவியான AI -யால் கொடுக்கமுடியாது என்பது
நிதர்சனமான உண்மையான இருக்கிறது
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி:
மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது தான் இந்த ஏஐ பள்ளி. இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளியாக தற்போது பிரபலமாகியுள்ளது கேரளா மாநிலம் திருவனந்தப்புரத்தில் உள்ள சாந்திகிரி வித்யாபவன் பள்ளி. இந்த தொழில்நுட்ப வசதியின் மூலம் பாடத்திட்ட வடிவமைப்பு, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல், மதிப்பீடு மற்றும் மாணவர் தரவு பகுப்பாய்வு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த AI-யில் இடம் பெற்றுள்ளது.
மாத்ருபூமி அறிக்கையின்படி, AI பள்ளியானது iLearning Engines (ILE) USA மற்றும் Vedhik eSchool ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இந்த புதிய கற்றல் முறை, நல்ல கல்வியை வழங்கப் போகிறது என்று வேதிக் இஸ்கூல் கூறுகிறது.
செயற்கை நுண்ணறிவு பள்ளியின் அம்சங்கள்:
இந்த AI பள்ளியானது தற்போது 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கானதாக இருக்கும். இதன் மூலம் மாணவர்கள் பாடங்களை விரிவாக கற்றுக்கொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக கல்வி அறிவைத் தாண்டி தனிப்பட்ட ஒருவரின் திறனைக் கண்டுபிடித்து அதை வளர்ப்பதற்கு ஏதுவாக இந்த ஏஐ பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர் கண்டுபிடிப்பாளர்கள். இதோடு பாடத்திட்டங்கள் மட்டுமில்லாது புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் உயர் கல்வி படிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் JEE, NEET, CUET, CLAT, GMAT மற்றும் IELTS உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களைத் தயார் படுத்துகிறது.
தொழில்நுட்பங்கள் என்றாலே பல ரூபாய் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்த AI பள்ளி ஆடம்பரமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும் இதற்கு அதிக செலவுகள் இல்லையாம். நம்முடைய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆன்லைன் ஆதாரங்கள் பள்ளியின் இணையத்தில் இருப்பதால், அதிக பணம் செலவழிக்காமல் இவற்றை நாம் எளிமையாக பயன்படுத்த முடியும்.
ChatGPT போன்ற மேம்பட்ட AI அமைப்புகள் வகுப்பறைகளில் ஆசிரியர்களை மாற்ற முடியுமா? என்ற கேள்வி அதிகளவில் எழுந்து வருகிறது. எந்த சூழலிலும், AI பள்ளி தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருந்தாலும், பாரம்பரிய கற்பித்தல் முறைகள் என்பது இன்றியமையாதவை. ஆசிரியர்கள் புகட்டும் மனித தன்மைமிக்க பாடங்களை ஒரு கருவியான AI -யால் கொடுக்கமுடியாது என்பது நிதர்சனமான உண்மையான இருக்கிறது