தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் காலை நேரத்தில் பசியின்றி கல்வி கற்க முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் காலை உணவுத் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தினர். முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படவே நடப்பு வருடம் 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த காலை உணவிற்கான நேரம் மற்றும் மெனு பட்டியல் வெளியாகி உள்ளது.
வகுப்பு: 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை
நேரம் : காலை 8.15 மணி முதல் காலை 8.50 மணி வரை
*திங்கள் கிழமை: கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார்.
*செவ்வாய் கிழமை: சேமியா, காய்கறி கிச்சடி.
*புதன் கிழமை: வெண்பொங்கல், காய்கறி சாம்பார்.
*வியாழன் கிழமை: அரிசி உப்புமா, காய்கறி சாம்பார்.
*வெள்ளிக்கிழமை: சோள காய்கறி கிச்சடி, ரவா கேசரி.