ஐடிஆர்.. வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும்.. இன்னும் ரீபண்ட் வரவில்லையா? அரசு ஷாக் அறிவிப்பு

Ennum Ezhuthum
1 minute read
0
ads banner
ஐடிஆர்.. வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும்.. இன்னும் ரீபண்ட் வரவில்லையா? அரசு ஷாக் அறிவிப்பு

 

இந்தியாவில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தவர்களில் கிட்டத்தட்ட 31 லட்சம் பேருக்கு பணம் அனுப்பப்படவில்லை.

இதற்கு பின் ஷாக்கிங் காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் மாத வருமானம், மற்ற வகைகளில் வருமானம் பெறக்கூடியவர்கள் எல்லோரும் வருமான வரி செலுத்த வேண்டும். இதையடுத்து ஒவ்வொரு வருடமும் ஜூன் - ஜூலை மாதங்களில் இந்த வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு வருடமும் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய அவகாசம், நேரம் கொடுக்கப்படும். இந்த வருடம் ஜூலை 31 வருமான வரி செலுத்துவோர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய நேரம் கொடுக்கப்பட்டது . கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வருடம் இதில் 1 கோடி என்ற எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டு உள்ளது. அதாவது 6.91 கோடிக்கும் அதிகமான ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

கடைசி வாரத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்தனர். இதனால் அவர்களுக்கு கொஞ்சம் தாமதமாக நேரம் எடுத்து ரீபண்ட் செல்கிறது. அதில் நேற்று முதல்நாள் பலருக்கும் பணம் ரிபண்ட் கொடுப்பதற்கான இன்டிமேஷன் சென்றுள்ளது. இன்னொரு பக்கம் பலருக்கும் அவர்களின் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கலில் உள்ள பிழைகள் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.

ஷாக்கிங்: அவர்கள் கொடுத்த தவறான தகவல்கள் குறித்தும் விளக்கம் கேட்டு மெயில் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் கிட்டத்தட்ட 31 லட்சம் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விட்டுள்ளனர். ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செய்யவில்லை.

இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படவில்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக தாக்கல் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ஏற்கனவே ரி பண்ட் சென்றுவிட்டது.

ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 21 வரை வருமான வரித்துறை அதிக அளவு தொகையை கொடுத்துள்ளது. கடைசியாக தாக்கல் செய்த பலருக்கு இந்த வாரம் கொடுக்கப்படும். இதுவரை மட்டும் சுமார் ரூ.72,215 கோடி வரியை வருமான வரித்துறை திருப்பிச் செலுத்தியுள்ளது.

தனி நபரை விட நிறுவனங்களுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 35 ஆயிரம் கோடி ரூபாய் தனி நபர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதே சமயம் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

கோரிக்கை: இந்தியாவில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தவர்களில் கிட்டத்தட்ட 31 லட்சம் பேருக்கு பணம் அனுப்பப்படவில்லை இவர்கள் உடனடியாக இ வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். வேறு காரணங்களுக்காக கணக்கில் பணம் பெறாதவர்கள் உடனடியாக அந்த தவறுகளை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் ஐடி ரிட்டர்ன்ஸ் அவர்களுக்கு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ads banner
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 29, March 2025