இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.
இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்குமான வழிகாட்டு
நெறிமுறைகளையும் வழங்கி வருகிறது. அத்துடன் வங்கிப் பணி மற்றும் விடுமுறை
நாட்களையும் அறிவித்து வருகிறது. அதன் படி செப்டம்பர் மாதத்திற்கான
விடுமுறை நாட்களை ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது.
செப்டம்பர்
மாதத்தில் வங்கிக் கிளைக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், எந்தத்
தொந்தரவும் ஏற்படாமல் இருக்க வங்கியின் விடுமுறை அட்டவணையைக்
தெரிந்துகொள்வது நல்லது. நாடு முழுவதும் நெட் பேங்கிங் சேவைகள் மற்றும்
ஏடிஎம்கள் எல்லா நாட்களிலும் செயல்படும். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின்
அறிவுறுத்தல் படி, திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றவோ
அல்லது டெபாசிட் செய்யவோ செப்டம்பர் 30 கடைசி தேதியாகும். இவற்றில் எத்தனை
நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பும் என்பதைத் தீர்மானித்த பிறகு
செப்டம்பர் 30 காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமா என்பதை ரிசர்வ் வங்கி முடிவு
செய்யும்.
தேசிய மற்றும் பிராந்திய விடுமுறைகளுக்காக செப்டம்பர்
மாதத்தில் 16 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில், நாடு
முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இவை தவிர, பிராந்திய
பண்டிகைகளின்படி, வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் வங்கிகள்
மூடப்பட்டிருக்கும். இந்தியா முழுவதிலும் அல்லாமல், குறிப்பிட்ட
மாநிலத்திற்கு மட்டும், பண்டிகை அல்லது திருவிழாவிற்கான விடுமுறை
வழங்கப்படும்.
செப்டம்பர் மாதத்தில் அனைத்து மாநில வாரியான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:
- செப்டம்பர் 3: ஞாயிறு. நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 6: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி காரணமாக புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத் மற்றும் பாட்னாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர்
7: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு அகமதாபாத், சண்டிகர், டேராடூன்,
காங்டாக், தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, ராய்ப்பூர்,
ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகள்
மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமையன்று, நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
- செப்டம்பர் 10: நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
- செப்டம்பர் 17: நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
- செப்டம்பர் 18: விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூரு மற்றும் தெலுங்கானாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர்
19: விநாயக சதுர்த்தி காரணமாக அகமதாபாத், பேலாப்பூர், புவனேஸ்வர், மும்பை,
நாக்பூர் மற்றும் பனாஜியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 20: விநாயக சதுர்த்தி மற்றும் நுவாகை காரணமாக கொச்சி மற்றும் புவனேஸ்வரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 22: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தை முன்னிட்டு கொச்சி, பனாஜி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 23: நான்காவது சனிக்கிழமையன்று நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
- செப்டம்பர் 24: நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
- செப்டம்பர் 25: ஸ்ரீமந்த் சங்கர்தேவ் பிறந்தநாளில் கவுகாத்தியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 27: மிலாட்-இ-ஷரீப் காரணமாக ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்..
- செப்டம்பர்
28: ஈத்-இ-மிலாத் காரணமாக அகமதாபாத், பெங்களூர், சென்னை, கான்பூர், லக்னோ,
மும்பை மற்றும் புது டெல்லியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர்
29: ஈத்-இ-மிலாத் காரணமாக அகமதாபாத், பெங்களூர், சென்னை, கான்பூர், லக்னோ,
மும்பை மற்றும் புது டெல்லியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.
செப்டம்பர் மாதத்தில் வங்கிக் கிளைக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், எந்தத் தொந்தரவும் ஏற்படாமல் இருக்க வங்கியின் விடுமுறை அட்டவணையைக் தெரிந்துகொள்வது நல்லது. நாடு முழுவதும் நெட் பேங்கிங் சேவைகள் மற்றும் ஏடிஎம்கள் எல்லா நாட்களிலும் செயல்படும். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் படி, திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ செப்டம்பர் 30 கடைசி தேதியாகும். இவற்றில் எத்தனை நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பும் என்பதைத் தீர்மானித்த பிறகு செப்டம்பர் 30 காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமா என்பதை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும்.
தேசிய மற்றும் பிராந்திய விடுமுறைகளுக்காக செப்டம்பர் மாதத்தில் 16 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில், நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இவை தவிர, பிராந்திய பண்டிகைகளின்படி, வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்தியா முழுவதிலும் அல்லாமல், குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும், பண்டிகை அல்லது திருவிழாவிற்கான விடுமுறை வழங்கப்படும்.
செப்டம்பர் மாதத்தில் அனைத்து மாநில வாரியான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:
- செப்டம்பர் 3: ஞாயிறு. நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 6: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி காரணமாக புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத் மற்றும் பாட்னாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 7: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு அகமதாபாத், சண்டிகர், டேராடூன், காங்டாக், தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமையன்று, நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
- செப்டம்பர் 10: நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
- செப்டம்பர் 17: நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
- செப்டம்பர் 18: விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூரு மற்றும் தெலுங்கானாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 19: விநாயக சதுர்த்தி காரணமாக அகமதாபாத், பேலாப்பூர், புவனேஸ்வர், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 20: விநாயக சதுர்த்தி மற்றும் நுவாகை காரணமாக கொச்சி மற்றும் புவனேஸ்வரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 22: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தை முன்னிட்டு கொச்சி, பனாஜி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 23: நான்காவது சனிக்கிழமையன்று நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
- செப்டம்பர் 24: நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
- செப்டம்பர் 25: ஸ்ரீமந்த் சங்கர்தேவ் பிறந்தநாளில் கவுகாத்தியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 27: மிலாட்-இ-ஷரீப் காரணமாக ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்..
- செப்டம்பர் 28: ஈத்-இ-மிலாத் காரணமாக அகமதாபாத், பெங்களூர், சென்னை, கான்பூர், லக்னோ, மும்பை மற்றும் புது டெல்லியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 29: ஈத்-இ-மிலாத் காரணமாக அகமதாபாத், பெங்களூர், சென்னை, கான்பூர், லக்னோ, மும்பை மற்றும் புது டெல்லியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்