பிறப்புச் சான்றிதழ் புதிய விதி "அக்டோபர் 1 முதல் அமல்"..! இதனால் என்னென்ன மாற்றங்கள்..!

Ennum Ezhuthum
1 minute read
0
ads banner
பிறப்புச் சான்றிதழ் புதிய விதி "அக்டோபர் 1 முதல் அமல்"..! இதனால் என்னென்ன மாற்றங்கள்..!

 

பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு நபரின் சட்டபூர்வமான இருப்பை நிரூபிக்கிறது. பிறப்புச் சான்றிதழலில் புதிதாகப் பிறந்த குழந்தையின் பிறந்த தேதி, பிறந்த இடம், பாலினம் மற்றும் பெயரை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கூறி வந்த நிலையில், அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்தலாம் என மத்திய உள்துறைஅமைச்சகம் அறிவித்து உள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 அக்டோபர் 1, 2023 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்க்கை, ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஆதார் எண், திருமண பதிவு அல்லது அரசு வேலை நியமனம் ஆகியவற்றிற்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பதிவாளர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 இன் அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம், 2023 மசோதா அனுமதிக்கிறது. இந்த புதிய சட்டம் அக்டோபர் 1, 2023 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 28, March 2025